• May 16 2025

உப்பின் விலை ஏழு மாதங்களில் 400 ரூபாயாக மாற்றம்- விமல் வீரவன்ச காட்டம்..!

Sharmi / May 16th 2025, 10:09 am
image

நாட்டில் உப்புப் பாக்கெட் ஒன்றின் விலை  60 ரூபாயாக நிர்ணயம் செய்ய 76 ஆண்டுகள் ஆனது என்றும், ஆனால் 60 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக மாற வெறும் ஏழு மாதங்கள் மட்டுமே ஆனது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவிவ்ததார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் கடந்த கால அரசாங்கங்கள் எவ்வளவுதான் லஞ்சம் கொடுக்க முயன்றாலும், ஒரு பாக்கெட் உப்பு அல்லது ஒரு கிலோ அரிசிக்கு ஒருபோதும் லஞ்சம் கொடுத்ததில்லை.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு திறமையின்மைக்கும் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்தப்படுகின்றது.

மோசடி மற்றும் ஊழல் இல்லாதது என்று கூறும் அரசாங்கம், உண்மையில் அவ்வாறு செய்வதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தினால், ஒரு பாக்கெட் உப்பு, ஒரு கிலோ அரிசி மற்றும் ஒரு தேங்காய் எப்படி இவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கும் என்று அவர் இதன் போது கேள்வி எழுப்பினார்.

அதேவேளை, எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கவுள்ளதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில், பொதுமக்களின் வாழ்க்கை மட்டுமல்ல, முழு தொழில்துறை அமைப்பும் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும்.

மேலும்  2024ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் லாபம் ஈட்டிய மின்சார சபை, 7 மாதங்களில் எப்படி நஷ்டத்தைச் சந்தித்திருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்த வேளை  எதிர்காலத்தின் மின் கட்டணம் இன்னும் அதிகரிக்கும் என்று அவர்  தெரிவித்துள்ளார்.

உப்பின் விலை ஏழு மாதங்களில் 400 ரூபாயாக மாற்றம்- விமல் வீரவன்ச காட்டம். நாட்டில் உப்புப் பாக்கெட் ஒன்றின் விலை  60 ரூபாயாக நிர்ணயம் செய்ய 76 ஆண்டுகள் ஆனது என்றும், ஆனால் 60 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக மாற வெறும் ஏழு மாதங்கள் மட்டுமே ஆனது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவிவ்ததார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் கடந்த கால அரசாங்கங்கள் எவ்வளவுதான் லஞ்சம் கொடுக்க முயன்றாலும், ஒரு பாக்கெட் உப்பு அல்லது ஒரு கிலோ அரிசிக்கு ஒருபோதும் லஞ்சம் கொடுத்ததில்லை.இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு திறமையின்மைக்கும் முந்தைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்தப்படுகின்றது.மோசடி மற்றும் ஊழல் இல்லாதது என்று கூறும் அரசாங்கம், உண்மையில் அவ்வாறு செய்வதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தினால், ஒரு பாக்கெட் உப்பு, ஒரு கிலோ அரிசி மற்றும் ஒரு தேங்காய் எப்படி இவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கும் என்று அவர் இதன் போது கேள்வி எழுப்பினார்.அதேவேளை, எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கவுள்ளதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில், பொதுமக்களின் வாழ்க்கை மட்டுமல்ல, முழு தொழில்துறை அமைப்பும் பெரும் நெருக்கடிக்குத் தள்ளப்படும்.மேலும்  2024ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் லாபம் ஈட்டிய மின்சார சபை, 7 மாதங்களில் எப்படி நஷ்டத்தைச் சந்தித்திருக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்த வேளை  எதிர்காலத்தின் மின் கட்டணம் இன்னும் அதிகரிக்கும் என்று அவர்  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement