• Apr 15 2026

ஜனாதிபதி இன்று இந்தியாவிற்கு விஜயம் - பல நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை

Chithra / Feb 17th 2026, 8:27 am
image

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியாவிற்கு செல்லவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், ஜனாதிபதி எதிர்வரும் 19ஆம் திகதி விசேட உரையாற்றவுள்ளார்.


இந்திய பிரதமரின் தலைமையில் 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த சர்வதேச மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.


மேலும் குறித்த இந்திய விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி இன்று இந்தியாவிற்கு விஜயம் - பல நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இந்தியாவிற்கு செல்லவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், ஜனாதிபதி எதிர்வரும் 19ஆம் திகதி விசேட உரையாற்றவுள்ளார்.இந்திய பிரதமரின் தலைமையில் 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த சர்வதேச மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.மேலும் குறித்த இந்திய விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement