விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராகப் போர் வீரர்கள் ஈட்டிய வெற்றியைப் பற்றிச் சுதந்திர தினத்தில் பேசுவதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்குத் துணிவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,
உலகின் பல நாடுகள் தங்களது சுதந்திர தினத்தில் தங்களது படைப்பிரிவுகள் மற்றும் இராணுவ அலகுகளின் வெற்றிகளைப் பெருமையுடன் பேசுவதாகக் குறிப்பிட்டார்.
முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது பெற்ற வெற்றிகளைக் கூட அந்த நாடுகள் நினைவுகூர்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய ஜனாதிபதி, 'டிட்வா' சூறாவளியின் போது ஆயுதப் படைகள் ஆற்றிய பங்களிப்பு குறித்துப் பேசினார்.
ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராகப் போர் வீரர்கள் ஈட்டிய வெற்றிகளைப் பற்றிப் பேசுவதற்கு அவருக்குத் துணிச்சல் இல்லை, என நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியைப் பற்றிப் பேசுவது இனவாதம் என்று அரசாங்கம் நினைத்தால், அது அவ்வாறு இல்லை. நாம் தமிழ் மக்களுக்கு எதிராகப் போர் புரியவில்லை என்று நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
78 ஆவது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் வேறாக கரிநாள் போராட்டம் நடத்துகின்றனர்.அவற்றை கண்டு கொள்ளாமல் அவற்றுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது.அதை நாங்கள் பிழை என்று சொல்லவில்லை.அவர்களுக்கும் உரிமை உண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க.
ஆனால் அந்த உரிமை அதிகாரம் ஏன் மற்றையவர்களுக்கு இல்லை. நாங்கள் இனவாதத்தை வளர்க்க விடமாட்டோம் என கூறிக் கொண்டு ஜனாதிபதி உட்பட 159 பேரும் இனவாதத்தை விதைக்கின்றனர்.
தென் பகுதியின் பெரும்பான்மையை விமர்சிப்பதோடு புலம்பெயர் தமிழர்களினதும் வடக்கு மக்களின் மனதை வெல்ல நினைத்தால் அது நடக்காது.அதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.அவ்வாறு செய்ய முடியாது.
நான் வினயமாக கேட்டுக் கொள்வது என்னவென்றால், மதத்தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்துங்கள். இனவாதத்தை தூண்ட விடமாட்டோம் என கூறிக் கொண்டு நாட்டில் இனவாதம் உருவாவதற்கான சந்தர்ப்ப சூழலுக்கு மக்கள் தள்ளப்படுவதை நிறுத்துங்கள்.
உங்கள் அரசியல் தளத்தில் புலம்பெயர் தமிழர்களிடம் நீங்கள் கொண்டிருக்கு மூலதன அனுகூலங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.அதற்காக மக்களை காட்டி கொடுக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
போர் வீரர்கள் ஈட்டிய வெற்றிகளைப் பற்றிப் பேச ஜனாதிபதிக்குத் துணிவில்லை - சீறிய நாமல் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிராகப் போர் வீரர்கள் ஈட்டிய வெற்றியைப் பற்றிச் சுதந்திர தினத்தில் பேசுவதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்குத் துணிவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று குற்றம் சாட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், உலகின் பல நாடுகள் தங்களது சுதந்திர தினத்தில் தங்களது படைப்பிரிவுகள் மற்றும் இராணுவ அலகுகளின் வெற்றிகளைப் பெருமையுடன் பேசுவதாகக் குறிப்பிட்டார்.முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது பெற்ற வெற்றிகளைக் கூட அந்த நாடுகள் நினைவுகூர்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.தற்போதைய ஜனாதிபதி, 'டிட்வா' சூறாவளியின் போது ஆயுதப் படைகள் ஆற்றிய பங்களிப்பு குறித்துப் பேசினார்.ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராகப் போர் வீரர்கள் ஈட்டிய வெற்றிகளைப் பற்றிப் பேசுவதற்கு அவருக்குத் துணிச்சல் இல்லை, என நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியைப் பற்றிப் பேசுவது இனவாதம் என்று அரசாங்கம் நினைத்தால், அது அவ்வாறு இல்லை. நாம் தமிழ் மக்களுக்கு எதிராகப் போர் புரியவில்லை என்று நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.78 ஆவது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் வேறாக கரிநாள் போராட்டம் நடத்துகின்றனர்.அவற்றை கண்டு கொள்ளாமல் அவற்றுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது.அதை நாங்கள் பிழை என்று சொல்லவில்லை.அவர்களுக்கும் உரிமை உண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க.ஆனால் அந்த உரிமை அதிகாரம் ஏன் மற்றையவர்களுக்கு இல்லை. நாங்கள் இனவாதத்தை வளர்க்க விடமாட்டோம் என கூறிக் கொண்டு ஜனாதிபதி உட்பட 159 பேரும் இனவாதத்தை விதைக்கின்றனர்.தென் பகுதியின் பெரும்பான்மையை விமர்சிப்பதோடு புலம்பெயர் தமிழர்களினதும் வடக்கு மக்களின் மனதை வெல்ல நினைத்தால் அது நடக்காது.அதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.அவ்வாறு செய்ய முடியாது.நான் வினயமாக கேட்டுக் கொள்வது என்னவென்றால், மதத்தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்துங்கள். இனவாதத்தை தூண்ட விடமாட்டோம் என கூறிக் கொண்டு நாட்டில் இனவாதம் உருவாவதற்கான சந்தர்ப்ப சூழலுக்கு மக்கள் தள்ளப்படுவதை நிறுத்துங்கள்.உங்கள் அரசியல் தளத்தில் புலம்பெயர் தமிழர்களிடம் நீங்கள் கொண்டிருக்கு மூலதன அனுகூலங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.அதற்காக மக்களை காட்டி கொடுக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.