இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் பிரகாரம், நாடு முழுவதும் இதுவரை 96,847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 1,356 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், மொத்த நோயாளர்களில் 21.27 சதவீதம் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.
அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 19,412 டெங்கு நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 7,164 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,212 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 6,178 பேரும் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தமது சுற்றுப்புறங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றி, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இலங்கையில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் பிரகாரம், நாடு முழுவதும் இதுவரை 96,847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 1,356 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதன்படி, அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், மொத்த நோயாளர்களில் 21.27 சதவீதம் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 19,412 டெங்கு நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 7,164 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,212 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 6,178 பேரும் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.டெங்கு பரவல் தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தமது சுற்றுப்புறங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றி, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.