• May 23 2026

தேவேந்திரமுனையில் இருந்து சென்று விபத்துக்குள்ளான நெடுநாள் படகு; உயிர்பிழைத்த நான்கு மீனவர்களும் இன்று நாட்டை வந்தடைவு!

shanu / Oct 31st 2025, 11:37 am
image

தேவேந்திரமுனையில் இருந்து கடலுக்குச் சென்று விபத்துக்குள்ளாகி உயிர் பிழைத்த நான்கு மீனவர்களும் 13 நாட்களுக்குப் பிறகு, இன்று (31) அதிகாலை 5.00 மணியளவில் கடற்படையினரால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் அழைத்து வரப்பட்டுள்ளனர். 


கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக ஆறு மீனவர்களுடன் நெடுநாள் படகு புறப்பட்டுச் சென்றது. 


பின்னர், கடந்த 16 ஆம் திகதி முதல் அந்த மீன்பிடிப் படகு காணாமல் போயுள்ளதாக படகின் உரிமையாளர் அறிவித்ததாக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்தது. 


குறித்த மீன்பிடிப் படகு இலங்கையின் தென்கிழக்கு கடல் கடற்பரப்பில் சுமார் 300 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. 


படகிலிருந்த 6 மீனவர்களில் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதுடன், மற்றுமொருவர் சுமார் 11 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். 


விபத்துக்குள்ளான படகில் மிகுதி இருந்த நான்கு மீனவர்களை இந்தோனேசிய மீன்பிடிப் படகு ஒன்று காப்பாற்றியதாக கடற்படைக்கு தகவல் கிடைத்தது.  


அதற்கமைய குறித்த  மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றை கடற்படை அனுப்பி வைத்தது.


விபத்துக்குள்ளான படகில் இருந்த நான்கு மீனவர்கள், குறித்த மீன்பிடிக் கப்பலுக்கு அருகில் சென்ற ஒரு வணிகக் கப்பலால் இந்தோனேசிய மீன்பிடிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்டனர்.

தேவேந்திரமுனையில் இருந்து சென்று விபத்துக்குள்ளான நெடுநாள் படகு; உயிர்பிழைத்த நான்கு மீனவர்களும் இன்று நாட்டை வந்தடைவு தேவேந்திரமுனையில் இருந்து கடலுக்குச் சென்று விபத்துக்குள்ளாகி உயிர் பிழைத்த நான்கு மீனவர்களும் 13 நாட்களுக்குப் பிறகு, இன்று (31) அதிகாலை 5.00 மணியளவில் கடற்படையினரால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் அழைத்து வரப்பட்டுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக ஆறு மீனவர்களுடன் நெடுநாள் படகு புறப்பட்டுச் சென்றது. பின்னர், கடந்த 16 ஆம் திகதி முதல் அந்த மீன்பிடிப் படகு காணாமல் போயுள்ளதாக படகின் உரிமையாளர் அறிவித்ததாக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்தது. குறித்த மீன்பிடிப் படகு இலங்கையின் தென்கிழக்கு கடல் கடற்பரப்பில் சுமார் 300 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. படகிலிருந்த 6 மீனவர்களில் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதுடன், மற்றுமொருவர் சுமார் 11 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். விபத்துக்குள்ளான படகில் மிகுதி இருந்த நான்கு மீனவர்களை இந்தோனேசிய மீன்பிடிப் படகு ஒன்று காப்பாற்றியதாக கடற்படைக்கு தகவல் கிடைத்தது.  அதற்கமைய குறித்த  மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்றை கடற்படை அனுப்பி வைத்தது.விபத்துக்குள்ளான படகில் இருந்த நான்கு மீனவர்கள், குறித்த மீன்பிடிக் கப்பலுக்கு அருகில் சென்ற ஒரு வணிகக் கப்பலால் இந்தோனேசிய மீன்பிடிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement