இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்க வேண்டியது அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரினுடைய கடமை. எனவே இவற்றை கருத்தில் கொண்டு எமது கடல் வளத்தை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட தலைவர் அன்ரனி சங்கர் தெரிவித்தார்.
படவிளக்கம்
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடபிராந்திய மீனவர்களின் பாரிய பிரச்சினையாக இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை காணப்படுகின்றன.
ராமேஸ்வரத்தில் இடம்பெற்ற கட்சதீவு மீட்பு போராட்டம் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரினால் கூறப்பட்ட விடயம் குறித்தும் அதற்கான தக்க பதிலடியை கடல் தொழில் அமைச்சர் வழங்கியுள்ளார்.
எமது கடல் தொழில் அமைச்சர் வழங்கிய பதிலடியை நாங்களும் கூற விரும்பு கின்றோம்.
இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடல் பரப்பில் அத்து மீறி நுழைந்து எமது கடல் வளத்தை நாசப்படுத்துவதும், இராமேஸ்வர மீனவ சங்கங்களினால் இலங்கைக்கு வந்து பேச்சு வார்த்தை மேற்கொள்ளச் சொல்வதும் கால அவகாசத்தை கோருவதாகவும் காணப்படுகின்றது.
இந்திய மீனவர்கள் சட்ட விரோதமான தொழிலையே மேற்கொள்கின்றனர். இதனை முற்று முழுதாக நிறுத்த வேண்டும். கச்சைதீவை இலங்கைக்கு ஒப்பந்த மூலம் வழங்கும் போது அதற்கான பல்வேறு விடையங்களை இலங்கை விட்டுக் கொடுத்துள்ளது.
எமது மீனவர்களின் பிரச்சினை வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்டதாக காணப்படுகிறது.
இலங்கை வட பகுதி மீனலவர்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.எமது மீனவர்களின் வயிற்றில் அடிக்கின்ற செயல்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.
இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்க வேண்டியது ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சரினுடைய கடமை என்பதை நாங்கள் கருதுகிறோம்.
எனவே இவற்றை கருத்தில் கொண்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல்,எமது கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
எமது கடல் வளத்தை பாதுகாக்க இந்திய வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்ரனி சங்கர் வலியுறுத்து இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்க வேண்டியது அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரினுடைய கடமை. எனவே இவற்றை கருத்தில் கொண்டு எமது கடல் வளத்தை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் மன்னார் மாவட்ட தலைவர் அன்ரனி சங்கர் தெரிவித்தார்.படவிளக்கம்மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,வடபிராந்திய மீனவர்களின் பாரிய பிரச்சினையாக இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகை காணப்படுகின்றன.ராமேஸ்வரத்தில் இடம்பெற்ற கட்சதீவு மீட்பு போராட்டம் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரினால் கூறப்பட்ட விடயம் குறித்தும் அதற்கான தக்க பதிலடியை கடல் தொழில் அமைச்சர் வழங்கியுள்ளார்.எமது கடல் தொழில் அமைச்சர் வழங்கிய பதிலடியை நாங்களும் கூற விரும்பு கின்றோம்.இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடல் பரப்பில் அத்து மீறி நுழைந்து எமது கடல் வளத்தை நாசப்படுத்துவதும், இராமேஸ்வர மீனவ சங்கங்களினால் இலங்கைக்கு வந்து பேச்சு வார்த்தை மேற்கொள்ளச் சொல்வதும் கால அவகாசத்தை கோருவதாகவும் காணப்படுகின்றது.இந்திய மீனவர்கள் சட்ட விரோதமான தொழிலையே மேற்கொள்கின்றனர். இதனை முற்று முழுதாக நிறுத்த வேண்டும். கச்சைதீவை இலங்கைக்கு ஒப்பந்த மூலம் வழங்கும் போது அதற்கான பல்வேறு விடையங்களை இலங்கை விட்டுக் கொடுத்துள்ளது.எமது மீனவர்களின் பிரச்சினை வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்டதாக காணப்படுகிறது. இலங்கை வட பகுதி மீனலவர்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.எமது மீனவர்களின் வயிற்றில் அடிக்கின்ற செயல்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்களின் படகுகள் வருகை தராமல் பாதுகாக்க வேண்டியது ஒரு நாட்டின் வெளிவிவகார அமைச்சரினுடைய கடமை என்பதை நாங்கள் கருதுகிறோம்.எனவே இவற்றை கருத்தில் கொண்டு எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாமல்,எமது கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.