திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடியானது, கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட நேரடி 'ஹேக்கிங்' அல்ல என்றும், இது மிகவும் நுணுக்கமான முறையில் மின்னஞ்சல் ஊடாக முன்னெடுக்கப்பட்ட ஆள்மாறாட்ட மோசடி என்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
"சர்வதேச நிறுவனம் ஒன்றின் பெயரைப் போன்று தோற்றமளிக்கும் வகையில் போலியான இணையதள முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை மோசடியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
அந்த நிறுவனத்தின் உண்மையான அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, திறைசேரி அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தி பணப்பரிமாற்றத்துக்கான அனுமதியைப் பெற்றுள்ளனர். இதன் ஊடாகவே அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த மோசடி தொடர்பில் பல முனைகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு, இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் இணைந்து இந்த நிதி எங்கே கொண்டு செல்லப்பட்டது என்பதையும், இதற்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதையும் கண்டறியப் பணியாற்றி வருகின்றன.
பணப்பரிமாற்றம் வங்கிக் கணக்குகள் ஊடாகவே நடைபெற்றுள்ளதால், அந்தப் பணத் தடயங்களை வைத்து இழந்த நிதியை மீண்டும் மீட்க முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்." - என்று பிரதி அமைச்சர் வீரரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மின்னஞ்சல் ஊடாக நடந்த ஆள்மாறாட்டமே காரணம் - திறைசேரி மோசடி 'ஹேக்கிங்' அல்ல டிஜிட்டல் பிரதி அமைச்சர் விளக்கம் திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடியானது, கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவி நடத்தப்பட்ட நேரடி 'ஹேக்கிங்' அல்ல என்றும், இது மிகவும் நுணுக்கமான முறையில் மின்னஞ்சல் ஊடாக முன்னெடுக்கப்பட்ட ஆள்மாறாட்ட மோசடி என்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.இந்த மோசடி குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,"சர்வதேச நிறுவனம் ஒன்றின் பெயரைப் போன்று தோற்றமளிக்கும் வகையில் போலியான இணையதள முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை மோசடியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.அந்த நிறுவனத்தின் உண்மையான அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, திறைசேரி அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தி பணப்பரிமாற்றத்துக்கான அனுமதியைப் பெற்றுள்ளனர். இதன் ஊடாகவே அரச நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.தற்போது இந்த மோசடி தொடர்பில் பல முனைகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு, இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் இணைந்து இந்த நிதி எங்கே கொண்டு செல்லப்பட்டது என்பதையும், இதற்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதையும் கண்டறியப் பணியாற்றி வருகின்றன.பணப்பரிமாற்றம் வங்கிக் கணக்குகள் ஊடாகவே நடைபெற்றுள்ளதால், அந்தப் பணத் தடயங்களை வைத்து இழந்த நிதியை மீண்டும் மீட்க முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்." - என்று பிரதி அமைச்சர் வீரரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.