பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேரில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதோடு ஏனைய மூவருக்கும் அதிதீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதோடு இவர்களுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்தை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பார்வையிட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் 21 முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் களனி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடரும் அதே வேளையில், பொலிஸார் அப்பகுதியில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
பொரளை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரின் நிலை கவலைக்கிடம் பொரளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நான்கு பேரில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதோடு ஏனைய மூவருக்கும் அதிதீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதோடு இவர்களுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்தை பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பார்வையிட்டுள்ளார்.குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்கள் 21 முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் களனி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடரும் அதே வேளையில், பொலிஸார் அப்பகுதியில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.