முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதர் குய் செங்ஹோங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது கொழும்பு – ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் அலுவலகத்தில் இன்று (12) காலை நடைபெற்றது.
இலங்கையின் அரசியல் நிலைமை மற்றும் சர்வதேச விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு சீனத் தூதருடன் இதேபோன்ற கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.
சீனத் தூதர் எதிர்வரும் நாட்களில் மற்றொரு முன்னாள் உயர்மட்ட அரசியல்வாதியுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணிலையும் சந்தித்த சீனத் தூதுவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான சீனத் தூதர் குய் செங்ஹோங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பானது கொழும்பு – ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அரசியல் அலுவலகத்தில் இன்று (12) காலை நடைபெற்றது.இலங்கையின் அரசியல் நிலைமை மற்றும் சர்வதேச விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு சீனத் தூதருடன் இதேபோன்ற கலந்துரையாடலை நடத்தியிருந்தார்.சீனத் தூதர் எதிர்வரும் நாட்களில் மற்றொரு முன்னாள் உயர்மட்ட அரசியல்வாதியுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.