• Apr 28 2026

25 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்! வடமராட்சியில் திடீர் திருப்பம்

shanu / Apr 28th 2026, 11:28 am
image

வடமராட்சிப் பகுதியில் உள்ள ஆலயத்தில் இருந்து இராணுவத்தினர் திடீரென வெளியேறியுள்ளனர். 


வடமராட்சி கிழக்கு நாகர்கோவில்  பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்திலிருந்தே இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.


25 வருடங்களுக்கு மேலாக  குறித்த ஆலயப்பகுதியைக் கைப்பற்றி குடியிருந்துள்ளனர். திடீரென நேற்று  அங்கிருந்த இராணுவத்தினர் வெளியேறினர். 


இராணுவத்தினர் வெளியேறியதைத் தொடர்ந்து  குறித்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.


ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவம் அங்கிருந்த அனைத்து கட்டிடங்களையும் இடித்து அழித்துவிட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


திடீரென இராணுவம் வெளியேறியது குறித்த தகவல்கள் என்ன என்பது இதுவரையில் வெளியாகவில்லை. 

25 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம் வடமராட்சியில் திடீர் திருப்பம் வடமராட்சிப் பகுதியில் உள்ள ஆலயத்தில் இருந்து இராணுவத்தினர் திடீரென வெளியேறியுள்ளனர். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில்  பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்திலிருந்தே இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.25 வருடங்களுக்கு மேலாக  குறித்த ஆலயப்பகுதியைக் கைப்பற்றி குடியிருந்துள்ளனர். திடீரென நேற்று  அங்கிருந்த இராணுவத்தினர் வெளியேறினர். இராணுவத்தினர் வெளியேறியதைத் தொடர்ந்து  குறித்த ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவம் அங்கிருந்த அனைத்து கட்டிடங்களையும் இடித்து அழித்துவிட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. திடீரென இராணுவம் வெளியேறியது குறித்த தகவல்கள் என்ன என்பது இதுவரையில் வெளியாகவில்லை. 

Advertisement

Advertisement

Advertisement