• Apr 22 2026

மீண்டும் தாக்குதல் நடத்த இராணுவம் தயார்! ட்ரம்ப் எச்சரிக்கை

Chithra / Apr 21st 2026, 8:29 pm
image

ஈரானுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டின் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடுக்க அமெரிக்க இராணுவம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


சி.என்.பி.சி (CNBC) ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


இந்த போர்நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி அமெரிக்க இராணுவம் தனது தளவாடங்களைப் புதுப்பித்துக்கொண்டுள்ளது.


எங்களிடம் போதுமான அளவு ஆயுதங்களும் மற்ற அனைத்துத் தேவைகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த இடைவெளியில் நாங்களும் எங்களை வலுப்படுத்திக்கொண்டோம், அவர்களும் (ஈரான்) ஓரளவிற்குத் தயார் செய்திருக்கலாம்.


தற்போது அமெரிக்க இராணுவம் தாக்குதலுக்கு முழுத் தயார் நிலையில் உள்ளது. நான் உத்தரவிட்டால் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்க அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.


இந்நிலையில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நாளை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளதாக இரண்டு அதிகாரிகள் எசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.


தற்போது நடைமுறையிலுள்ள இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளன.


ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மோதல்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மீண்டும் தாக்குதல் நடத்த இராணுவம் தயார் ட்ரம்ப் எச்சரிக்கை ஈரானுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டின் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடுக்க அமெரிக்க இராணுவம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.சி.என்.பி.சி (CNBC) ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இந்த போர்நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி அமெரிக்க இராணுவம் தனது தளவாடங்களைப் புதுப்பித்துக்கொண்டுள்ளது.எங்களிடம் போதுமான அளவு ஆயுதங்களும் மற்ற அனைத்துத் தேவைகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த இடைவெளியில் நாங்களும் எங்களை வலுப்படுத்திக்கொண்டோம், அவர்களும் (ஈரான்) ஓரளவிற்குத் தயார் செய்திருக்கலாம்.தற்போது அமெரிக்க இராணுவம் தாக்குதலுக்கு முழுத் தயார் நிலையில் உள்ளது. நான் உத்தரவிட்டால் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்க அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நாளை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ளதாக இரண்டு அதிகாரிகள் எசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.தற்போது நடைமுறையிலுள்ள இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளன.ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் மோதல்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement