எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது. நாம் வீதியில் நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம். கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக எதிர்வரும் மே 1ம் திகதி அடையாள ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அனைத்து தரப்பினரையும் ஆதரவு தந்துதவுமாறு கேப்பாபிலவு மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பாக கேப்பாபிலவு மக்களால் நினைவூட்டல் கடிதம் ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ. உமாமகேஸ்வரனை சந்தித்து கையளிக்கப்பட்டது.
அதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கேப்பாபிலவு மக்கள்,
கடந்த 17 வருடங்களாக தமது பூர்வீக வாழ்விடத்தை கோரி அரசிடம் நீதி கேட்டு வருகின்றோம். கடந்த மாதம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமைச்சர் உபாலி சமரசிங்க தங்களை சந்தித்து காணி விடுவிப்பு தொடர்பாக சாதகமான முடிவை பெற்றுத்தருவதாக கூறியிருந்தார். பல மாதங்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், இன்றையதினம் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அவர் ஊடாக அமைச்சருக்கும் காணி விடுவிப்பு தொடர்பான நினைவூட்டல் கடிதம் ஒன்றினை கையளிக்க கேப்பாபிலவு மக்கள் சென்றிருந்தனர்.
அதேவேளை, மாவட்ட அரச அதிபருடன் கலந்துரையாடியபோது காணி விடுவிப்பு தொடர்பாக எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்பட்ட காலத்தில் மாதிரி கிராமம் அமைக்கப்பட்டு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு குடியமர்த்தப்பட்டதாகவும், அக்குடும்பங்களுக்கு காணி மற்றும் வீடுகள் வழங்கப்பட்டதாகவும் கூறினர்.
அவர்களின் கூற்றுப்படி, ஏறத்தாழ 255 குடும்பங்களுக்கு சொந்த காணி மற்றும் மாற்றுக் காணி வழங்கப்பட்டுள்ள நிலையில், 55 குடும்பங்களுக்கு இதுவரை சொந்த காணி கிடைக்கவில்லை. மேலும், 11 குடும்பங்களுக்கு மாற்றுக் காணியும் வழங்கப்படாமல் உள்ளதாக தெரிவித்தனர்.
இவர்கள் வாழ்வாதாரமாக கடல், கரை மற்றும் விவசாய நிலங்களை நம்பியிருந்த போதிலும், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
“போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் மக்களின் வாழ்விடத்தில் இன்னும் பாதுகாப்பு செயலகம் என்ற பெயரில் காணி அபகரிப்பு தொடர்வது தேவையற்ற ஒன்று. ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு மக்களின் காணியை மக்களுக்கே மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், தமது வாழ்வாதாரங்களும் தொழில்துறைகளும் முடக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து வருகின்ற மே மாதம் 1ஆம் திகதி தொழிலாளர் தினத்தன்று கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து நலன்விரும்பிகள், பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் இணைந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
கடந்த 17 வருடங்களாக தமது பூர்வீக நிலத்தில் குடியேற முடியாமல் தவித்து வருவதாகவும், பல மாவட்ட அரசாங்க அதிபர்கள் மாறிய போதிலும் தாங்கள் மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை வந்து நில விடுவிப்பு குறித்து தொடர்ந்து கேட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
இன்றைய சந்திப்பின் போது, மாவட்ட அரசாங்க அதிபரை நேரில் சந்திக்க முன் அனுமதி பெற வேண்டும் என்றும், ஊடகங்களை ஏன் அழைத்து வந்தீர்கள் என கேட்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், பல ஜனாதிபதிகளை நேரில் சந்தித்திருந்தாலும் தற்போதைய ஜனாதிபதியை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், புதுக்குடியிருப்புக்கு வந்தபோதும் சந்திக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினர்.
“எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது. எமது நிலத்தில் உள்ள வளங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.
நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இது எவ்வகையிலும் நியாயமல்ல. எமது கேப்பாபிலவு மண்ணில் எங்களை வாழ விடுங்கள் என்பதே எமது கோரிக்கை” என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது; கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது. நாம் வீதியில் நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம். கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக எதிர்வரும் மே 1ம் திகதி அடையாள ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அனைத்து தரப்பினரையும் ஆதரவு தந்துதவுமாறு கேப்பாபிலவு மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பாக கேப்பாபிலவு மக்களால் நினைவூட்டல் கடிதம் ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ. உமாமகேஸ்வரனை சந்தித்து கையளிக்கப்பட்டது.அதன் பின்னர் இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கேப்பாபிலவு மக்கள்,கடந்த 17 வருடங்களாக தமது பூர்வீக வாழ்விடத்தை கோரி அரசிடம் நீதி கேட்டு வருகின்றோம். கடந்த மாதம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமைச்சர் உபாலி சமரசிங்க தங்களை சந்தித்து காணி விடுவிப்பு தொடர்பாக சாதகமான முடிவை பெற்றுத்தருவதாக கூறியிருந்தார். பல மாதங்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், இன்றையதினம் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அவர் ஊடாக அமைச்சருக்கும் காணி விடுவிப்பு தொடர்பான நினைவூட்டல் கடிதம் ஒன்றினை கையளிக்க கேப்பாபிலவு மக்கள் சென்றிருந்தனர்.அதேவேளை, மாவட்ட அரச அதிபருடன் கலந்துரையாடியபோது காணி விடுவிப்பு தொடர்பாக எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.மேலும், இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்பட்ட காலத்தில் மாதிரி கிராமம் அமைக்கப்பட்டு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு குடியமர்த்தப்பட்டதாகவும், அக்குடும்பங்களுக்கு காணி மற்றும் வீடுகள் வழங்கப்பட்டதாகவும் கூறினர்.அவர்களின் கூற்றுப்படி, ஏறத்தாழ 255 குடும்பங்களுக்கு சொந்த காணி மற்றும் மாற்றுக் காணி வழங்கப்பட்டுள்ள நிலையில், 55 குடும்பங்களுக்கு இதுவரை சொந்த காணி கிடைக்கவில்லை. மேலும், 11 குடும்பங்களுக்கு மாற்றுக் காணியும் வழங்கப்படாமல் உள்ளதாக தெரிவித்தனர்.இவர்கள் வாழ்வாதாரமாக கடல், கரை மற்றும் விவசாய நிலங்களை நம்பியிருந்த போதிலும், பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.“போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் மக்களின் வாழ்விடத்தில் இன்னும் பாதுகாப்பு செயலகம் என்ற பெயரில் காணி அபகரிப்பு தொடர்வது தேவையற்ற ஒன்று. ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு மக்களின் காணியை மக்களுக்கே மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.மேலும், தமது வாழ்வாதாரங்களும் தொழில்துறைகளும் முடக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து வருகின்ற மே மாதம் 1ஆம் திகதி தொழிலாளர் தினத்தன்று கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து நலன்விரும்பிகள், பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் இணைந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.கடந்த 17 வருடங்களாக தமது பூர்வீக நிலத்தில் குடியேற முடியாமல் தவித்து வருவதாகவும், பல மாவட்ட அரசாங்க அதிபர்கள் மாறிய போதிலும் தாங்கள் மாதத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை வந்து நில விடுவிப்பு குறித்து தொடர்ந்து கேட்டு வருவதாகவும் தெரிவித்தனர். இன்றைய சந்திப்பின் போது, மாவட்ட அரசாங்க அதிபரை நேரில் சந்திக்க முன் அனுமதி பெற வேண்டும் என்றும், ஊடகங்களை ஏன் அழைத்து வந்தீர்கள் என கேட்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.மேலும், பல ஜனாதிபதிகளை நேரில் சந்தித்திருந்தாலும் தற்போதைய ஜனாதிபதியை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், புதுக்குடியிருப்புக்கு வந்தபோதும் சந்திக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினர்.“எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது. எமது நிலத்தில் உள்ள வளங்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இது எவ்வகையிலும் நியாயமல்ல. எமது கேப்பாபிலவு மண்ணில் எங்களை வாழ விடுங்கள் என்பதே எமது கோரிக்கை” என அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.