• Apr 15 2026

98 ஆவது ஒஸ்கார் விருது விழா!

shanu / Mar 16th 2026, 10:04 am
image

திரை உலகின் மிக உயரிய கௌரவமாக கருதப்படும் ஒஸ்கார் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹொலிவுட் டொல்பி தியேட்டரில் (Dolby Theatre) இன்று கோலாகலமாகத் தொடங்கியது. 


உலகெங்கும் உள்ள திரைக்கலைஞர்களின் கனவு நனவாகும் இந்த 98-வது ஒஸ்கார் திருவிழாவை பிரபல நகைச்சுவை நடிகர் கெனன் ஓ பிரையன் தொகுத்து வழங்குகிறார்.


இலங்கை நேரப்படி அதிகாலை 4.30 மணிக்குத் தொடங்கிய இவ்விழாவில், ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு மிக்க விருதுகள் அறிவிக்கப்பட்டன.


'வெப்பன்ஸ்' (Weapons) திரைப்படத்தில் நடித்த ஏமி மெடிகன் (Amy Madigan) தனது சிறப்பான நடிப்பிற்காக இந்த ஆண்டின் முதல் ஒஸ்கார் விருதைத் தட்டிச் சென்றார்.


மூத்த கலைஞர் சீன் பென் (Sean Penn) சிறந்த துணை நடிகருக்கான விருதினைப் பெற்றார்.


சிறந்த அனிமேஷன் திரைப்படமாக 'கே-பெப் டிமன் ஹண்டர்' (K-Pop Demon Hunters) தெரிவானது. அத்துடன், சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருது 'தி கேர்ள் ஹூ கிரைட் பேர்ல்ஸ்' (The Girl Who Cried Pearls) படத்திற்கு வழங்கப்பட்டது.


தற்போது நிலவும் சர்வதேசப் போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விழா நடைபெறும் டொல்பி தியேட்டர் வளாகத்தைச் சுற்றிப் பல கட்ட சோதனைகளுக்குப் பிறகே விருந்தினர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.


இருப்பினும், விழாவுக்கு நேரடிப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை என்றும், கலைவிழா எவ்வித இடையூறுமின்றித் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

98 ஆவது ஒஸ்கார் விருது விழா திரை உலகின் மிக உயரிய கௌரவமாக கருதப்படும் ஒஸ்கார் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹொலிவுட் டொல்பி தியேட்டரில் (Dolby Theatre) இன்று கோலாகலமாகத் தொடங்கியது. உலகெங்கும் உள்ள திரைக்கலைஞர்களின் கனவு நனவாகும் இந்த 98-வது ஒஸ்கார் திருவிழாவை பிரபல நகைச்சுவை நடிகர் கெனன் ஓ பிரையன் தொகுத்து வழங்குகிறார்.இலங்கை நேரப்படி அதிகாலை 4.30 மணிக்குத் தொடங்கிய இவ்விழாவில், ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு மிக்க விருதுகள் அறிவிக்கப்பட்டன.'வெப்பன்ஸ்' (Weapons) திரைப்படத்தில் நடித்த ஏமி மெடிகன் (Amy Madigan) தனது சிறப்பான நடிப்பிற்காக இந்த ஆண்டின் முதல் ஒஸ்கார் விருதைத் தட்டிச் சென்றார்.மூத்த கலைஞர் சீன் பென் (Sean Penn) சிறந்த துணை நடிகருக்கான விருதினைப் பெற்றார்.சிறந்த அனிமேஷன் திரைப்படமாக 'கே-பெப் டிமன் ஹண்டர்' (K-Pop Demon Hunters) தெரிவானது. அத்துடன், சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருது 'தி கேர்ள் ஹூ கிரைட் பேர்ல்ஸ்' (The Girl Who Cried Pearls) படத்திற்கு வழங்கப்பட்டது.தற்போது நிலவும் சர்வதேசப் போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விழா நடைபெறும் டொல்பி தியேட்டர் வளாகத்தைச் சுற்றிப் பல கட்ட சோதனைகளுக்குப் பிறகே விருந்தினர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.இருப்பினும், விழாவுக்கு நேரடிப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏதும் இல்லை என்றும், கலைவிழா எவ்வித இடையூறுமின்றித் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement