• Apr 14 2026

காட்டு மரை ஒன்றை வேட்டையாடிய இருவர் கைது!

shanu / Mar 16th 2026, 9:54 am
image

காட்டு மரை ஒன்றை வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இச் சம்பவம் கடந்த 11ஆம் திகதி நோட்டன் பகுதியில் உள்ள ஒஸ்போன் தோட்ட 50 ஏக்கர் பிரிவில் உள்ள வனப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.


ஹட்டன் வனத்துறை  அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து ஹட்டன் வனத்துறை  அதிகாரிகள் நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி மற்றும் நோட்டன் பொலிஸார் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேட்டையாடிய மரை இறைச்சியுடன் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 52 வயது 37 வயது மதிக்கத்தக்க நோட்டன் ஒஸ்போன் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களிடமிருந்து வேட்டையாடிய மரை  இறைச்சி 54 கிலோ அதன் தலை 12 கிலோ 500 கிரேம் அதன் தோல் 13 கிலோ அடங்கலாக 79 கிலோ 500 கிரேம் ஆகியவற்றுடன் 11 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 


இதன்போது  சந்தேக நபர்கள் இருவரும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.  அத்துடன் வேட்டையாடிய மரை இறைச்சியை பாவனைக்கு உதவாத வகையில் மண்ணெண்ணெய் ஊற்றி புதைக்கவும் பணிபுரிந்துள்ளார்.


இந்த சுற்றி வளைப்பை ஹட்டன் வனத்துறை அதிகாரிகளான வி.ஜீ.கவிந்துருக்ஷான், ஜீ.ஏ.உப்புல், ஜீ.டீ.பி.கே.ஆர்.குணசேகர, நுவன்பெர்ரா மெல், நோட்டன் பொலிஸ் ஜார்ஜன் பிரதீப் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரிலால், அவர்களுடன் இணைந்து நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி ஆர்,எம்,பி.பி ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

காட்டு மரை ஒன்றை வேட்டையாடிய இருவர் கைது காட்டு மரை ஒன்றை வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் கடந்த 11ஆம் திகதி நோட்டன் பகுதியில் உள்ள ஒஸ்போன் தோட்ட 50 ஏக்கர் பிரிவில் உள்ள வனப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.ஹட்டன் வனத்துறை  அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து ஹட்டன் வனத்துறை  அதிகாரிகள் நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி மற்றும் நோட்டன் பொலிஸார் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேட்டையாடிய மரை இறைச்சியுடன் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 52 வயது 37 வயது மதிக்கத்தக்க நோட்டன் ஒஸ்போன் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களிடமிருந்து வேட்டையாடிய மரை  இறைச்சி 54 கிலோ அதன் தலை 12 கிலோ 500 கிரேம் அதன் தோல் 13 கிலோ அடங்கலாக 79 கிலோ 500 கிரேம் ஆகியவற்றுடன் 11 ம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது  சந்தேக நபர்கள் இருவரும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.  அத்துடன் வேட்டையாடிய மரை இறைச்சியை பாவனைக்கு உதவாத வகையில் மண்ணெண்ணெய் ஊற்றி புதைக்கவும் பணிபுரிந்துள்ளார்.இந்த சுற்றி வளைப்பை ஹட்டன் வனத்துறை அதிகாரிகளான வி.ஜீ.கவிந்துருக்ஷான், ஜீ.ஏ.உப்புல், ஜீ.டீ.பி.கே.ஆர்.குணசேகர, நுவன்பெர்ரா மெல், நோட்டன் பொலிஸ் ஜார்ஜன் பிரதீப் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரிலால், அவர்களுடன் இணைந்து நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி ஆர்,எம்,பி.பி ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement