• May 08 2026

பெரும்பான்மையை நிரூபித்த 'தவெக'! நாளை விஜய் பதவியேற்பாரா?

Chithra / May 8th 2026, 8:15 pm
image

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தது. ஏற்கனவே 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கிய நிலையில், ஆட்சியமைக்க மேலும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக இருந்தது.


இதனையடுத்து தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அனுமதி கோரியிருந்தார். அதன்போது பெரும்பான்மையை நிரூபிக்கும் உறுப்பினர்களின் ஆதரவு பட்டியலை வழங்குமாறு ஆளுநர் கேட்டிருந்தார். 


இந்த நிலையில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக தரப்பு ஆலோசனையில் ஈடுபட்டது. இன்று நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெக ஆட்சியமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தது.


அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெகவுக்கு ஆதரவு கடிதம் வழங்கியது. பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கும் தனது ஆதரவை அறிவித்துள்ளது.


இதன்மூலம் தவெகவுக்கு கிடைத்துள்ள மொத்த ஆதரவு 119 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இதையடுத்து பெரும்பான்மையை நிரூபித்துள்ளதாக கூறி விஜய், தமிழக ஆளுநரை மூன்றாவது முறையாக சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.


ஆளுநரை சந்தித்த விஜய்யை சிரித்த முகத்துடன் வரவேற்று, தோளில் தட்டிக்கொடுத்து வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.


இதற்கிடையில், முதல் முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்ற விஜய், தவெக ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்கியதற்காக  நன்றி தெரிவித்தார். அங்கு கட்சித் தலைவர்கள் வாசல் வரை வந்து விஜய்யை அழைத்து சென்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


இந்நிலையில், நாளை காலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

பெரும்பான்மையை நிரூபித்த 'தவெக' நாளை விஜய் பதவியேற்பாரா தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தது. ஏற்கனவே 5 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கிய நிலையில், ஆட்சியமைக்க மேலும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக இருந்தது.இதனையடுத்து தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அனுமதி கோரியிருந்தார். அதன்போது பெரும்பான்மையை நிரூபிக்கும் உறுப்பினர்களின் ஆதரவு பட்டியலை வழங்குமாறு ஆளுநர் கேட்டிருந்தார். இந்த நிலையில் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக தரப்பு ஆலோசனையில் ஈடுபட்டது. இன்று நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெக ஆட்சியமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தது.அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெகவுக்கு ஆதரவு கடிதம் வழங்கியது. பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கும் தனது ஆதரவை அறிவித்துள்ளது.இதன்மூலம் தவெகவுக்கு கிடைத்துள்ள மொத்த ஆதரவு 119 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து பெரும்பான்மையை நிரூபித்துள்ளதாக கூறி விஜய், தமிழக ஆளுநரை மூன்றாவது முறையாக சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.ஆளுநரை சந்தித்த விஜய்யை சிரித்த முகத்துடன் வரவேற்று, தோளில் தட்டிக்கொடுத்து வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையில், முதல் முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்ற விஜய், தவெக ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்கியதற்காக  நன்றி தெரிவித்தார். அங்கு கட்சித் தலைவர்கள் வாசல் வரை வந்து விஜய்யை அழைத்து சென்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.இந்நிலையில், நாளை காலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement