• May 05 2026

இலங்கையில் பயங்கர விபத்துகள்; பொலிஸ் அதிகாரி பலி! 30க்கும் மேற்பட்டோர் காயம்

Chithra / Jan 27th 2026, 7:28 am
image



நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற மூன்று வெவ்வேறு வீதி விபத்துகளில் சிக்கி ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளதுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


பிபில - பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் நேற்று  இரண்டு பேருந்துகளும் ஒரு லொறியும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின. 


இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்து பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவ்வீதியிலான போக்குவரத்துச் சேவைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன.


https://www.facebook.com/share/p/1HGmv8dmcT/


மொரந்துடுவ பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில், எகொட உயன பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியான (உதவி பொலிஸ் பரிசோதகர்) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 


துவிச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அனுராதபுரம் - கண்டி பிரதான வீதியின் மரதன்கடவெல பகுதியில் ஜீப் வண்டி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.


ஜீப்பில் பயணித்த வெளிநாட்டுத் தம்பதி, சாரதி மற்றும் வேனில் பயணித்தவர்கள் என மொத்தம் 9 பேர் காயமடைந்தனர்.


படுகாயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற ஜீப் வண்டி, எதிரே வந்த வேனுடன் மோதியதே விபத்திற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


மழைக்காலம் மற்றும் சீரற்ற காலநிலை நிலவும் போது வாகனங்களை அவதானமாகச் செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

இலங்கையில் பயங்கர விபத்துகள்; பொலிஸ் அதிகாரி பலி 30க்கும் மேற்பட்டோர் காயம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற மூன்று வெவ்வேறு வீதி விபத்துகளில் சிக்கி ஒரு பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளதுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.பிபில - பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் நேற்று  இரண்டு பேருந்துகளும் ஒரு லொறியும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்து பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவ்வீதியிலான போக்குவரத்துச் சேவைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன.https://www.facebook.com/share/p/1HGmv8dmcT/மொரந்துடுவ பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில், எகொட உயன பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியான (உதவி பொலிஸ் பரிசோதகர்) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அனுராதபுரம் - கண்டி பிரதான வீதியின் மரதன்கடவெல பகுதியில் ஜீப் வண்டி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.ஜீப்பில் பயணித்த வெளிநாட்டுத் தம்பதி, சாரதி மற்றும் வேனில் பயணித்தவர்கள் என மொத்தம் 9 பேர் காயமடைந்தனர்.படுகாயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற ஜீப் வண்டி, எதிரே வந்த வேனுடன் மோதியதே விபத்திற்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மழைக்காலம் மற்றும் சீரற்ற காலநிலை நிலவும் போது வாகனங்களை அவதானமாகச் செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement