• Aug 28 2026

300kW-க்கும் அதிகமான சூரிய மின்படலங்களுக்கு தற்காலிக கட்டுப்பாடு

Aathira / Aug 27th 2026, 11:50 am
image

300 கிலோவோட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட கூரை சூரிய மின்படலங்களை, இன்று (27) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி, குறித்த சூரிய மின்படலங்களை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் சூரிய மின்சக்தி உற்பத்தி மற்றும் தேசிய மின் கட்டமைப்புடன் அதன் இணைப்பு தொடர்பான விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.

அதன்படி, 300kW-க்கும் அதிகமான திறன் கொண்ட சூரிய மின்படலங்களை வைத்திருப்பவர்கள் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய குறிப்பிட்ட நேரத்தில் அவற்றைத் துண்டிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

300kW-க்கும் அதிகமான சூரிய மின்படலங்களுக்கு தற்காலிக கட்டுப்பாடு 300 கிலோவோட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட கூரை சூரிய மின்படலங்களை, இன்று (27) முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க கோரிக்கை விடுத்துள்ளார்.இதன்படி, குறித்த சூரிய மின்படலங்களை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மின்சாரக் கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சூரிய மின்சக்தி உற்பத்தி மற்றும் தேசிய மின் கட்டமைப்புடன் அதன் இணைப்பு தொடர்பான விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.அதன்படி, 300kW-க்கும் அதிகமான திறன் கொண்ட சூரிய மின்படலங்களை வைத்திருப்பவர்கள் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய குறிப்பிட்ட நேரத்தில் அவற்றைத் துண்டிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement