• May 22 2026

நாட்டிலுள்ள பல மாவட்டங்களில் தொலை தொடர்புகள் துண்டிப்பு;வெளியான காரணம்- மக்கள் அவதி!

Ziya / Nov 29th 2025, 9:55 am
image

நாட்டின் பல பகுதிகளில் தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

கடுகண்ணாவ மற்றும் வத்தளை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் சேதமடைந்தன்  காரணமாக  இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன  என டிஜிட்டல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி,

பரவலான வெள்ளம் மற்றும் தொடர்ச்சியான மின் தடைகள் பல மாவட்டங்களில் தொலைத் தொடர்பு சேவைகளை மேலும் பாதித்துள்ளன. இதன் விளைவாக பல சமூகங்கள் நிலையான தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகளை இழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தகவல் தொடர்பு இணைப்புகளை மீட்டெடுக்க, பழுதுபார்க்கும் குழுக்களும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களும் சவாலான சூழ்நிலையில் பணியாற்றி வருவதாகவும், சிரமங்கள் மற்றும் நீர் மட்டங்கள் அதிகரிப்பதால் சில இடங்களில் மறுசீரமைப்பு முயற்சிகள் மெதுவாகி வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகால குழுக்கள் முன்னுரிமை அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும்,நிலைமைகள் சீராகும் பட்சத்தில் முழுமையான தொலைத்தொடர்பு இணைப்பு விரைவில் மீட்டமைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.









நாட்டிலுள்ள பல மாவட்டங்களில் தொலை தொடர்புகள் துண்டிப்பு;வெளியான காரணம்- மக்கள் அவதி நாட்டின் பல பகுதிகளில் தொலைத் தொடர்பு மற்றும் இணைய சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.கடுகண்ணாவ மற்றும் வத்தளை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் சேதமடைந்தன்  காரணமாக  இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன  என டிஜிட்டல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி,பரவலான வெள்ளம் மற்றும் தொடர்ச்சியான மின் தடைகள் பல மாவட்டங்களில் தொலைத் தொடர்பு சேவைகளை மேலும் பாதித்துள்ளன. இதன் விளைவாக பல சமூகங்கள் நிலையான தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகளை இழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய தகவல் தொடர்பு இணைப்புகளை மீட்டெடுக்க, பழுதுபார்க்கும் குழுக்களும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களும் சவாலான சூழ்நிலையில் பணியாற்றி வருவதாகவும், சிரமங்கள் மற்றும் நீர் மட்டங்கள் அதிகரிப்பதால் சில இடங்களில் மறுசீரமைப்பு முயற்சிகள் மெதுவாகி வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகால குழுக்கள் முன்னுரிமை அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும்,நிலைமைகள் சீராகும் பட்சத்தில் முழுமையான தொலைத்தொடர்பு இணைப்பு விரைவில் மீட்டமைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement