• Sep 21 2026

சிவராசா அனோஜனை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் அரசிடம் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி கோரிக்கை

dorin / Sep 21st 2026, 2:30 pm
image

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான தகுந்த சட்ட மற்றும் இராஜாங்க நடவடிக்கைகளை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சவூதி அரேபியாவில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வெளியாகியுள்ள செய்தியானது, அவரது குடும்பத்தினரையும் ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் அரசு மௌனம் காக்காமல், இந்த விவகாரத்தில் உடனடியாகத் துரிதமாகச் செயற்பட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வெளிநாடுகளில் பல்வேறு ஆபத்துகளை எதிர்கொள்ளும் இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டியது நாட்டின் அரசின் தலையாய கடமையாகும் என அரசியல் தரப்பினரும் மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றனர்.

எனவே, அனோஜனின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு இராஜதந்திர வழிகளிலும், சட்ட ரீதியாகவும் அரசு உடனடி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்." - என்றார்.


சிவராசா அனோஜனை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் அரசிடம் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி கோரிக்கை சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான தகுந்த சட்ட மற்றும் இராஜாங்க நடவடிக்கைகளை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"சவூதி அரேபியாவில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வெளியாகியுள்ள செய்தியானது, அவரது குடும்பத்தினரையும் ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் அரசு மௌனம் காக்காமல், இந்த விவகாரத்தில் உடனடியாகத் துரிதமாகச் செயற்பட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.வெளிநாடுகளில் பல்வேறு ஆபத்துகளை எதிர்கொள்ளும் இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டியது நாட்டின் அரசின் தலையாய கடமையாகும் என அரசியல் தரப்பினரும் மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றனர்.எனவே, அனோஜனின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு இராஜதந்திர வழிகளிலும், சட்ட ரீதியாகவும் அரசு உடனடி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement