• May 22 2026

சட்டவிரோதமாகச் சொத்துக்களை குவித்த திடீர் பணக்காரர்கள்; யாழில் சிக்கவுள்ள பலர்

Chithra / Oct 24th 2025, 12:53 pm
image

வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றில் ஈடுபட்டு சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த எட்டுப் பேருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு சொத்துச் சேர்த்தவர்களுக்கு எதிரான விசாரணைகளை நடத்துவதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்று நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே, குறித்த எட்டுப் பேருக்கும் எதிரான விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்த எட்டுப்பேரில் மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திலும், ஐவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவருக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சொத்துச் சேர்ந்த குற்றச்சாட்டும், ஏழு பேருக்கு எதிராக வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்ந்த குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.

வன்முறைகளில் ஈடுபட்டு சொத்துச் சேர்த்தவர்கள், வன்முறைகளை ஒழுங்கமைத்தவர்களுக்கு எதிராக எதிர்வரும் நாள்களில் சிறப்புப் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

சட்டவிரோதமாகச் சொத்துக்களை குவித்த திடீர் பணக்காரர்கள்; யாழில் சிக்கவுள்ள பலர் வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றில் ஈடுபட்டு சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த எட்டுப் பேருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு சொத்துச் சேர்த்தவர்களுக்கு எதிரான விசாரணைகளை நடத்துவதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்று நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அந்தப் பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே, குறித்த எட்டுப் பேருக்கும் எதிரான விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.இந்த எட்டுப்பேரில் மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திலும், ஐவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.அவர்களில் ஒருவருக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சொத்துச் சேர்ந்த குற்றச்சாட்டும், ஏழு பேருக்கு எதிராக வன்முறைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்ந்த குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.வன்முறைகளில் ஈடுபட்டு சொத்துச் சேர்த்தவர்கள், வன்முறைகளை ஒழுங்கமைத்தவர்களுக்கு எதிராக எதிர்வரும் நாள்களில் சிறப்புப் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement