• Apr 15 2026

முல்லைத்தீவில் க.பொ.த.உயர்தரப்பரீட்சையில் சாதித்த மாணவர்களுக்கு கௌரவிப்பு!

shanu / Apr 15th 2026, 9:45 am
image


 


முல்லைத்தீவு மாவட்டத்தில்  உயர்தரப் பரீட்சையில் தோற்றி ஒவ்வொரு பிரிவுகளிலும் மாவட்டத்தில் முதல் ஐந்து நிலைகளைப்பெற்ற மாணவர்களை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று வாழ்த்துவதுடன், சாதித்த மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கும் செயற்பாட்டையும் மேற்கொண்டுவருகின்றார்.


இந்நிலையில் குறித்த உயர்தரப் பரீட்சையில் சாதித்த மாணவர்களை மதிப்பளிக்கும் செயற்பாட்டின் இரண்டாங்கட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், 11மாணவர்களை மதிப்பளித்துள்ளார்.


அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொறியியல் தொழில்நுட்பப்பிரிவில் A,2B சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவனான சிறீதரன் விதுசன், உயிர்முறைகள் தொழில் நுட்பப் பிரிவில் A,B,C சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் இரண்டாவது நிலையைப்பெற்ற ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவனான ரவிக்குமார் ஜதுசன், பொறியியல் தெழில்நுட்பப் பிரிவில் B,2C சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையைப்பெற்ற புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவியான அந்தோனிவைத்தியதாதன் கிஷானி, 


வணிகப் பிரிவில் 3Aசித்திகளைப்பெற்று மாவட்டத்தில் இரண்டாவது நிலையைப் பெற்றுக்கொண்ட புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவியான அந்தோனிப்பிலிப் தேவஅகல்யா, கலைப்பிரிவில் 3Aசித்திகளைப்பெற்று மாவட்டத்தில் இரண்டாவது நிலையைப்பெற்றுக்கொண்ட புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவியான நற்குணசிங்கம் கியூடியா, பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் B,2C சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் மூன்றாவது நிலையைப்பெற்ற ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவனான ஜோன்சன்ஜெயக்குமார் இளங்கீரன், 


பொறியியல் தொழில்நுட்பப்பிரிவில் 2C,S சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் நான்காவது நிலையைப்பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவனான அருணகிரிநாதன் அனுசியன், உயிர்முறைகள் தொழில்நுட்பப் பிரிவில் 2B,C சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் நான்காவது நிலையைப்பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவியான பரமசிவம் புனிதா, பௌதீக விஞ்ஞானப்பிரிவில் A,2Bசித்திகளைப் பெற்று மாவட்டத்தில் நான்காவது நிலையைப்பெற்ற முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவனான பொன்னையா தாசன், 


உயிர்முறைகள் தொழில்நுட்பப் பிரிவில் B,C,Sசித்திகளைப் பெற்று மாவட்டத்தில் ஐந்தாவது நிலையைப்பெற்ற ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவனான விஜயகுமார் நிக்சன், வணிகப் பிரிவில் 3Aசித்திகளைப்பெற்று மாவட்டத்தில் ஐந்தாவது நிலையைப்பெற்ற புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவியான தர்மராசா வைஷாலிகா ஆகிய மாணவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இரண்டாவது கட்டமாக நேரில் சென்று வாழ்த்தியதுடன், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளித்தார்.


குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் குறித்த மாணவர்களை மதிப்பளிக்கும் செயற்பாட்டின் முதற்கட்டத்தில் 09மாணவர்களும், இரண்டாம் கட்டத்தில் 11மாணவர்களுமாக, ஒவ்வொரு பிரிவுகளிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் ஐந்து நிலைகளைப்பெற்ற 20மாணவர்கள் இதுவரை மதிப்பளிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மாணவர்கள் அடுத்த கட்டங்களினூடாக மதிப்பளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் க.பொ.த.உயர்தரப்பரீட்சையில் சாதித்த மாணவர்களுக்கு கௌரவிப்பு  முல்லைத்தீவு மாவட்டத்தில்  உயர்தரப் பரீட்சையில் தோற்றி ஒவ்வொரு பிரிவுகளிலும் மாவட்டத்தில் முதல் ஐந்து நிலைகளைப்பெற்ற மாணவர்களை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று வாழ்த்துவதுடன், சாதித்த மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கும் செயற்பாட்டையும் மேற்கொண்டுவருகின்றார்.இந்நிலையில் குறித்த உயர்தரப் பரீட்சையில் சாதித்த மாணவர்களை மதிப்பளிக்கும் செயற்பாட்டின் இரண்டாங்கட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், 11மாணவர்களை மதிப்பளித்துள்ளார்.அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொறியியல் தொழில்நுட்பப்பிரிவில் A,2B சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவனான சிறீதரன் விதுசன், உயிர்முறைகள் தொழில் நுட்பப் பிரிவில் A,B,C சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் இரண்டாவது நிலையைப்பெற்ற ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவனான ரவிக்குமார் ஜதுசன், பொறியியல் தெழில்நுட்பப் பிரிவில் B,2C சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் இரண்டாம் நிலையைப்பெற்ற புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவியான அந்தோனிவைத்தியதாதன் கிஷானி, வணிகப் பிரிவில் 3Aசித்திகளைப்பெற்று மாவட்டத்தில் இரண்டாவது நிலையைப் பெற்றுக்கொண்ட புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவியான அந்தோனிப்பிலிப் தேவஅகல்யா, கலைப்பிரிவில் 3Aசித்திகளைப்பெற்று மாவட்டத்தில் இரண்டாவது நிலையைப்பெற்றுக்கொண்ட புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவியான நற்குணசிங்கம் கியூடியா, பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் B,2C சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் மூன்றாவது நிலையைப்பெற்ற ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவனான ஜோன்சன்ஜெயக்குமார் இளங்கீரன், பொறியியல் தொழில்நுட்பப்பிரிவில் 2C,S சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் நான்காவது நிலையைப்பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவனான அருணகிரிநாதன் அனுசியன், உயிர்முறைகள் தொழில்நுட்பப் பிரிவில் 2B,C சித்திகளைப்பெற்று மாவட்டத்தில் நான்காவது நிலையைப்பெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவியான பரமசிவம் புனிதா, பௌதீக விஞ்ஞானப்பிரிவில் A,2Bசித்திகளைப் பெற்று மாவட்டத்தில் நான்காவது நிலையைப்பெற்ற முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவனான பொன்னையா தாசன், உயிர்முறைகள் தொழில்நுட்பப் பிரிவில் B,C,Sசித்திகளைப் பெற்று மாவட்டத்தில் ஐந்தாவது நிலையைப்பெற்ற ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவனான விஜயகுமார் நிக்சன், வணிகப் பிரிவில் 3Aசித்திகளைப்பெற்று மாவட்டத்தில் ஐந்தாவது நிலையைப்பெற்ற புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவியான தர்மராசா வைஷாலிகா ஆகிய மாணவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இரண்டாவது கட்டமாக நேரில் சென்று வாழ்த்தியதுடன், அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பளித்தார்.குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் முன்னெடுக்கப்படும் குறித்த மாணவர்களை மதிப்பளிக்கும் செயற்பாட்டின் முதற்கட்டத்தில் 09மாணவர்களும், இரண்டாம் கட்டத்தில் 11மாணவர்களுமாக, ஒவ்வொரு பிரிவுகளிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் ஐந்து நிலைகளைப்பெற்ற 20மாணவர்கள் இதுவரை மதிப்பளிக்கப்பட்டுள்ளனர். ஏனைய மாணவர்கள் அடுத்த கட்டங்களினூடாக மதிப்பளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement