புதிய கல்வியாண்டு இன்று (07) ஆரம்பிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பொலிஸ் வாகனங்களில் ஏற்றிச் சென்று பாடசாலைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் கொத்மலை பகுதியில் பதிவாகியுள்ளது.
தித்வா புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொத்மலை – கம்பளை பிரதான வீதியின் பனங்கம்மன பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக, குறித்த வீதியில் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
இதனால், பனங்கம்மன பகுதியில் இருந்து கொத்மலை நியூ டவுனில் அமைந்துள்ள காமினி திசாநாயக்க பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் ஆசிரியர்களும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்திற்கொண்டு, கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆய்வாளர் இந்திகா லலித் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் தங்களது இரண்டு பொலிஸ் வாகனங்களை பயன்படுத்தி அவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனிடையே, பனங்கம்மன பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடம் வரை பேருந்து சேவைகள் இதுவரை ஆரம்பிக்கப்படாததால், மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வினவியபோது, கொத்மலை பேருந்து பணிமனை முகாமையாளருடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும், இன்று (07) பிற்பகல் முதல் கொத்மலை நியூ டவுனில் இருந்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி வரை பேருந்து சேவையை இயக்குவதற்கு பணிமனை முகாமையாளர் நடவடிக்கை எடுக்க இணங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் இப்பகுதியில் பாரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டிருந்த நிலையில், 2026 ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் பெய்த கடும் மழையினால் மீண்டும் நிலச்சரிவுகளும் வீதி வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
வீதி சேதமடைந்துள்ள நிலையில், அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மரக்கட்டைகளைப் பயன்படுத்தி ஆபத்தான முறையில் குறித்த பகுதியை கடந்து சென்று வருகின்றனர்.
நிலச்சரிவை கடந்து பாடசாலை செல்லும் மாணவர்கள் - உதவிக்கரம் நீட்டிய பொலிஸார் புதிய கல்வியாண்டு இன்று (07) ஆரம்பிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து துண்டிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பொலிஸ் வாகனங்களில் ஏற்றிச் சென்று பாடசாலைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் கொத்மலை பகுதியில் பதிவாகியுள்ளது.தித்வா புயலினால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொத்மலை – கம்பளை பிரதான வீதியின் பனங்கம்மன பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக, குறித்த வீதியில் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.இதனால், பனங்கம்மன பகுதியில் இருந்து கொத்மலை நியூ டவுனில் அமைந்துள்ள காமினி திசாநாயக்க பாடசாலைக்கு செல்லும் மாணவர்களும் ஆசிரியர்களும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்திற்கொண்டு, கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆய்வாளர் இந்திகா லலித் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் தங்களது இரண்டு பொலிஸ் வாகனங்களை பயன்படுத்தி அவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதனிடையே, பனங்கம்மன பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடம் வரை பேருந்து சேவைகள் இதுவரை ஆரம்பிக்கப்படாததால், மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்தும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இது தொடர்பில் கொத்மலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வினவியபோது, கொத்மலை பேருந்து பணிமனை முகாமையாளருடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும், இன்று (07) பிற்பகல் முதல் கொத்மலை நியூ டவுனில் இருந்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி வரை பேருந்து சேவையை இயக்குவதற்கு பணிமனை முகாமையாளர் நடவடிக்கை எடுக்க இணங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களிலும் இப்பகுதியில் பாரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டிருந்த நிலையில், 2026 ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் பெய்த கடும் மழையினால் மீண்டும் நிலச்சரிவுகளும் வீதி வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன.வீதி சேதமடைந்துள்ள நிலையில், அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மரக்கட்டைகளைப் பயன்படுத்தி ஆபத்தான முறையில் குறித்த பகுதியை கடந்து சென்று வருகின்றனர்.