திருகோணமலை -மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி சேருநுவர மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று காலை கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .
பெற்றோர்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்து இவ் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பின்னர் மணிக்கூட்டு கோபுரச் சந்தியிலிருந்து பிரதான வீதியூடாகச் சென்று பிரதேச சபை வளாகத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் 450 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 34 ஆசிரியர்கள் தேவையான நிலையில் தற்போது 16 ஆசிரியர்களே இப்பாடசாலையில் காணப்படுகின்றனர். ஏனைய ஆசிரியர்களைபெற்றுத்தருமாறு கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதால் மாணவர்கள் இடைவிலகி தூரப் பிரதேச பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ளதாக இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
ஆசிரியர்கள் இல்லாததால் இடைவிலகும் மாணவர்கள்; பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு போராட்டம் திருகோணமலை -மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி சேருநுவர மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று காலை கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .பெற்றோர்கள், பாடசாலை மாணவர்கள் இணைந்து இவ் போராட்டத்தை முன்னெடுத்தனர்.பின்னர் மணிக்கூட்டு கோபுரச் சந்தியிலிருந்து பிரதான வீதியூடாகச் சென்று பிரதேச சபை வளாகத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் 450 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 34 ஆசிரியர்கள் தேவையான நிலையில் தற்போது 16 ஆசிரியர்களே இப்பாடசாலையில் காணப்படுகின்றனர். ஏனைய ஆசிரியர்களைபெற்றுத்தருமாறு கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதால் மாணவர்கள் இடைவிலகி தூரப் பிரதேச பாடசாலைக்கு செல்ல வேண்டியுள்ளதாக இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.