• Apr 23 2026

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவன்; 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி! சிறியதாயின் உருக்கமான கோரிக்கை

Chithra / Apr 22nd 2026, 11:59 am
image

மட்டக்களப்பு சீயோன் தோவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் தனது தாயையும், தந்தையை இழந்த சிறுவனுக்கு அவர் விரும்பும் ஆங்கில மொழி மூலமாக கற்கும் கல்வி 7 வருடங்களாக மறுக்கப்பட்டு வருவதாக அச்சிறுவனின் சிறியதாய் கவலை தெரிவித்துள்ளார்.


ஏழு ஆண்டுகள் கடந்தும் நீதிக்காக பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்ற தொணிப் பொருளின் கீழ் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பிலான கருத்தாடல் நிகழ்வொன்று இன்று மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்றது. 


இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் 


ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் அச்சிறுவனின் பெற்றோர் உயிரிழந்துள்ள நிலையில் அச்சிறுவனின் தங்கையும் அத்தாக்குதலில் இரு கண்களின் பார்வையையும் இழந்துள்ளார். அவர்கள் இருவரையும் அவர்களது சிறியதாய் வளர்த்து வருகின்றார்.


இந்நிலையில் குறித்த சிறுவன் மட்டக்களப்பிலுள்ள ஆங்கில மொழி மூலம் சர்வதேச பாடசாலை ஒன்றில் தரம் 6 வரைக்கும் கல்வி கற்று வந்த நிலையில் 7 ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்பதற்குரிய  வசதிகள் குறித்த சர்வதேச பாடசாலையில் இன்மையால் அரச பாடசாலையை நாடவேண்டியிருந்தது.


மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிக்கும் வசதிகளையுடைய பாடசாலைகளில் அச்சிறுவனை இணைக்கும் முயற்சியில் 7 வருடங்களாக மேற்கொண்டும் அது இற்றை வரையில் கைகூடவில்லை.


தற்போது 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் அச்சிறுவன் மிகுந்த சிரமத்தின் மத்தியில் அவனுக்கு பரீட்சையமில்லாத தமிழ் மொழி மூலம் கல்வி கற்பிக்கும் பாசாலையில் இணைத்து கற்பித்து வருவதாகவும், இதனால் பெரும் சிரமத்தையும், செலவுகையும் எதிர்கொண்டு வருவதாகவும்,

எவ்வாறாயினும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் தனது அப்பாவையும், அம்மாவையும் இழந்து தங்கையின் பார்வையையும் இழந்துள்ள தனது அக்காவின் மகனுக்கு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஏதாவது ஒரு பாடசாலையில் ஆங்கில மொழி மூலமான கல்வியை தொடர்வதற்கு உரிய அதிகாரிகள் உதவி செய்யுமாறு உரிய சிறுவனின் சியதாய் உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார்.


ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவன்; 7 வருடமாக மறுக்கப்படும் கல்வி சிறியதாயின் உருக்கமான கோரிக்கை மட்டக்களப்பு சீயோன் தோவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் தனது தாயையும், தந்தையை இழந்த சிறுவனுக்கு அவர் விரும்பும் ஆங்கில மொழி மூலமாக கற்கும் கல்வி 7 வருடங்களாக மறுக்கப்பட்டு வருவதாக அச்சிறுவனின் சிறியதாய் கவலை தெரிவித்துள்ளார்.ஏழு ஆண்டுகள் கடந்தும் நீதிக்காக பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்ற தொணிப் பொருளின் கீழ் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பிலான கருத்தாடல் நிகழ்வொன்று இன்று மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் அச்சிறுவனின் பெற்றோர் உயிரிழந்துள்ள நிலையில் அச்சிறுவனின் தங்கையும் அத்தாக்குதலில் இரு கண்களின் பார்வையையும் இழந்துள்ளார். அவர்கள் இருவரையும் அவர்களது சிறியதாய் வளர்த்து வருகின்றார்.இந்நிலையில் குறித்த சிறுவன் மட்டக்களப்பிலுள்ள ஆங்கில மொழி மூலம் சர்வதேச பாடசாலை ஒன்றில் தரம் 6 வரைக்கும் கல்வி கற்று வந்த நிலையில் 7 ஆம் தரத்திற்கு மேல் கல்வி கற்பதற்குரிய  வசதிகள் குறித்த சர்வதேச பாடசாலையில் இன்மையால் அரச பாடசாலையை நாடவேண்டியிருந்தது.மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஆங்கில மொழி மூலம் கல்வி கற்பிக்கும் வசதிகளையுடைய பாடசாலைகளில் அச்சிறுவனை இணைக்கும் முயற்சியில் 7 வருடங்களாக மேற்கொண்டும் அது இற்றை வரையில் கைகூடவில்லை.தற்போது 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் அச்சிறுவன் மிகுந்த சிரமத்தின் மத்தியில் அவனுக்கு பரீட்சையமில்லாத தமிழ் மொழி மூலம் கல்வி கற்பிக்கும் பாசாலையில் இணைத்து கற்பித்து வருவதாகவும், இதனால் பெரும் சிரமத்தையும், செலவுகையும் எதிர்கொண்டு வருவதாகவும்,எவ்வாறாயினும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் தனது அப்பாவையும், அம்மாவையும் இழந்து தங்கையின் பார்வையையும் இழந்துள்ள தனது அக்காவின் மகனுக்கு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஏதாவது ஒரு பாடசாலையில் ஆங்கில மொழி மூலமான கல்வியை தொடர்வதற்கு உரிய அதிகாரிகள் உதவி செய்யுமாறு உரிய சிறுவனின் சியதாய் உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement