• May 23 2026

பாடசாலை நுழைவாயிலில் மாணவி மீது கத்தி குத்து; சிறுவன் கைது!

shanu / Oct 9th 2025, 10:00 am
image

கனடாவின் மான்ட்ரீயலில் உள்ள செயிண்ட்-லூக் உயர்நிலைப் பாடசாலையின்  நுழைவாயிலருகே 14 வயது மாணவி கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மான்ட்ரீயல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


 

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம்  செவ்வாய்க்கிழமை காலை 8.50 மணியளவில் நோட்ரே டேம் டி கிரேஸ் பகுதியில்  இடம்பெற்றுள்ளது. 


பாடசாலையில் வகுப்புகள் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு குறித்த மாணவி மீது கத்திக் குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.



சம்பவத்தையடுத்து பொலிஸாருக்கு  பல 911 அவசர அழைப்புகள் விடுக்கப்பட்டதையடுத்து  பொலிஸார் விரைவாக சம்பவ இடத்துக்கு சென்றனர்.


அங்கு சிறுமி கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்திருப்பதையும் அவரது கண் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும்  மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.


இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகளின் அடிப்படையில் 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


குறித்த சிறுவன் இளைஞர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவார் என மான்ட்ரீயல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குற்றம் சாட்டப்பட்ட சிறுவனும் பாதிக்கப்பட்ட சிறுமியும் இருவரும் சிறுவயதினர் என்பதால், அவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை நுழைவாயிலில் மாணவி மீது கத்தி குத்து; சிறுவன் கைது கனடாவின் மான்ட்ரீயலில் உள்ள செயிண்ட்-லூக் உயர்நிலைப் பாடசாலையின்  நுழைவாயிலருகே 14 வயது மாணவி கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மான்ட்ரீயல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம்  செவ்வாய்க்கிழமை காலை 8.50 மணியளவில் நோட்ரே டேம் டி கிரேஸ் பகுதியில்  இடம்பெற்றுள்ளது. பாடசாலையில் வகுப்புகள் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு குறித்த மாணவி மீது கத்திக் குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தையடுத்து பொலிஸாருக்கு  பல 911 அவசர அழைப்புகள் விடுக்கப்பட்டதையடுத்து  பொலிஸார் விரைவாக சம்பவ இடத்துக்கு சென்றனர்.அங்கு சிறுமி கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்திருப்பதையும் அவரது கண் கீழ் பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும்  மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகளின் அடிப்படையில் 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.குறித்த சிறுவன் இளைஞர் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவார் என மான்ட்ரீயல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குற்றம் சாட்டப்பட்ட சிறுவனும் பாதிக்கப்பட்ட சிறுமியும் இருவரும் சிறுவயதினர் என்பதால், அவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement