இலங்கையின் திறன் மேம்பாட்டு துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் தொழிற்பயிற்சி அதிகார சபை (VTA), காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளது.
இதற்கமைய இளைஞர் யுவதிகளின் தொழிற் திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்பிற்கும் சுயதொழிலுக்கும் வழிவகுக்கும் தரமான பயிற்சிகளை வழங்கும் நோக்கில் பல்வேறு தேசிய தொழில் தகைமை (NVQ) பாடநெறிகள் நடத்தப்படவுள்ளன.
அந்த வகையில் ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிபுணர் (Apparel Design Technician) கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
NVQ Level 04 தரமுள்ள சான்றிதழ் உட்பட 01 வருட (முழு நேரம்) கால அளவு கொண்ட பாடநெறியாக நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் உற்பத்தி திறன்கள் அமைந்துள்ளது.
மேலும் மாதாந்தம் ரூ.7,500/- வரை பயிற்சி உதவித்தொகை தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட NVQ சான்றிதழ் தொழில்துறை அனுபவமிக்க பயிற்றுவிப்பாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வழிகாட்டல் நவீன பயிற்சி வசதிகள் இதன் மூலம் மாணவர்கள் நன்மைகளை பெற்றுக் கொள்கின்றனர்.
மேலும் சமுர்த்தி மற்றும் அஸ்வெசும குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு பாடநெறி கட்டணம் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.
தொழில்முறை எதிர்காலத்தை உருவாக்க விரும்பும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பாடநெறி 02 ஜூலை 2026 ஆரம்பமாக உள்ளதுடன் 30 ஜூன் 2026 விண்ணப்ப இறுதித் திகதியாகும்.
செய்முறை கற்றல் பகுதிகள்
* Pattern Making (வடிவமைப்பு வரைதல்)
* Embroidery (கை மற்றும் இயந்திர எம்பிராய்டரி)
* Screen Printing
* Dress Form Draping
* Batik & Appliqué Work
* Badge & Patch Design
மேலதிக தகவல்களுக்கு
VTA காரைதீவு தொழிற்பயிற்சி நிலையம்
தொலைபேசி: 0775824123 ,0771112538
'திறனே வெற்றிக்கான பாதை – இன்று இணைந்து உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்கள் என காரைதீவு தொழிற்பயிற்சி நிலையம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்தள்ளது.
தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பம் இலங்கையின் திறன் மேம்பாட்டு துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் தொழிற்பயிற்சி அதிகார சபை (VTA), காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளது.இதற்கமைய இளைஞர் யுவதிகளின் தொழிற் திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்பிற்கும் சுயதொழிலுக்கும் வழிவகுக்கும் தரமான பயிற்சிகளை வழங்கும் நோக்கில் பல்வேறு தேசிய தொழில் தகைமை (NVQ) பாடநெறிகள் நடத்தப்படவுள்ளன.அந்த வகையில் ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிபுணர் (Apparel Design Technician) கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. NVQ Level 04 தரமுள்ள சான்றிதழ் உட்பட 01 வருட (முழு நேரம்) கால அளவு கொண்ட பாடநெறியாக நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் உற்பத்தி திறன்கள் அமைந்துள்ளது.மேலும் மாதாந்தம் ரூ.7,500/- வரை பயிற்சி உதவித்தொகை தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட NVQ சான்றிதழ் தொழில்துறை அனுபவமிக்க பயிற்றுவிப்பாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வழிகாட்டல் நவீன பயிற்சி வசதிகள் இதன் மூலம் மாணவர்கள் நன்மைகளை பெற்றுக் கொள்கின்றனர்.மேலும் சமுர்த்தி மற்றும் அஸ்வெசும குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான மாணவர்களுக்கு பாடநெறி கட்டணம் இலவசமாகவும் வழங்கப்படுகிறது.தொழில்முறை எதிர்காலத்தை உருவாக்க விரும்பும் இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.பாடநெறி 02 ஜூலை 2026 ஆரம்பமாக உள்ளதுடன் 30 ஜூன் 2026 விண்ணப்ப இறுதித் திகதியாகும்.செய்முறை கற்றல் பகுதிகள்* Pattern Making (வடிவமைப்பு வரைதல்)* Embroidery (கை மற்றும் இயந்திர எம்பிராய்டரி)* Screen Printing* Dress Form Draping* Batik & Appliqué Work* Badge & Patch Designமேலதிக தகவல்களுக்குVTA காரைதீவு தொழிற்பயிற்சி நிலையம்தொலைபேசி: 0775824123 ,0771112538'திறனே வெற்றிக்கான பாதை – இன்று இணைந்து உங்கள் எதிர்காலத்தை உருவாக்குங்கள் என காரைதீவு தொழிற்பயிற்சி நிலையம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்தள்ளது.