யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை, அவருடைய தாயின் கண்முன் நிர்வாணமாக்கி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்த போதிலும், பொலிஸ் உயர்மட்டத்தில் இருந்த செல்வாக்குக் காரணமாக அந்த நபர் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நான்குக்கு மேற்பட்டோர் கோப்பாய் பொலிசார் கைது செய்த நிலையில் அதில் பிரதான சந்தேக நபரான இவர் தலைமறைவாக இருந்துள்ளார்.
இவ்வாறான பின்னணியிலேயே, திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரை சந்தேகநபர் பார்வையிட வந்தவேளை பொலிஸ் புலனாய்வுத் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடா செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்ட நிலையில் இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகின்றது.
குறித்த சந்தேக நபரை கைது செய்யும்போது கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உயர் மட்டத்திலிருந்து அழுத்தங்கள் வந்த நிலையில் அதனையும் பொறுப்பெடுத்தாது குறித்த நபரை கைது செய்துள்ளார்.
எனினும் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆயராக்கிய போது 3 லட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.
தாயின் கண்முன் ஆடைகளை களைந்து இளைஞர் மீது தாக்குதல்; யாழில் 11 மாதங்களின் பின் சிக்கிய சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை, அவருடைய தாயின் கண்முன் நிர்வாணமாக்கி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்த போதிலும், பொலிஸ் உயர்மட்டத்தில் இருந்த செல்வாக்குக் காரணமாக அந்த நபர் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் நான்குக்கு மேற்பட்டோர் கோப்பாய் பொலிசார் கைது செய்த நிலையில் அதில் பிரதான சந்தேக நபரான இவர் தலைமறைவாக இருந்துள்ளார். இவ்வாறான பின்னணியிலேயே, திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரை சந்தேகநபர் பார்வையிட வந்தவேளை பொலிஸ் புலனாய்வுத் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.கனடா செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்ட நிலையில் இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகின்றது.குறித்த சந்தேக நபரை கைது செய்யும்போது கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உயர் மட்டத்திலிருந்து அழுத்தங்கள் வந்த நிலையில் அதனையும் பொறுப்பெடுத்தாது குறித்த நபரை கைது செய்துள்ளார்.எனினும் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆயராக்கிய போது 3 லட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.