• Aug 25 2026

திருகோணமலையில் சுற்றாடலுக்கு கடும் பாதுகாப்பு; அபிவிருத்தி தொடர்பில் பல முக்கிய தீர்மானங்கள்

Aathira / Aug 25th 2026, 3:10 pm
image

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (25) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. 

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயேந்தலால் ரத்னசேகர ஆகியோரின் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் W. G. M. ஹேமச்சந்திராவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயகொடி கலந்துகொண்டு விசேட உரையாற்றினார்.

திருகோணமலை மாவட்டத்தின் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த சுற்றாடல் பிரதி அமைச்சர்,

சட்டவிரோத மற்றும் முறையற்ற மணல் அகழ்வுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

குறிப்பாக, மாவட்டத்தில் சுற்றாடல் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவதுடன், கடந்த காலங்களில் வன எல்லைகளுக்குள் வழங்கப்பட்ட மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை மீளாய்வு செய்யவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதனுடன், மாவட்டத்தில் அதிகரித்து வரும் மனித–யானை மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது. காணி விடுவிப்பு தொடர்பான எல்லைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

எல் நினோ காலநிலை மாற்ற நிலைமையை எதிர்கொள்வதற்கான மாவட்டத்தின் தயார்நிலை குறித்தும் அனர்த்த மேலாண்மைப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ். சுகுணதாசன் விளக்கமளித்தார்.

மேலும், திண்மக்கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், கடலரிப்பைத் தடுப்பதற்கான மாவட்ட ரீதியிலான செயற்திட்டத்தை உருவாக்குதல் மற்றும் கடல், கடலோர சுற்றுலாத் தளங்களைப் பாதிக்கும் கழிவுநீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

சாம்பல்தீவு களப்பு உள்ளிட்ட கண்டல் தாவரங்கள், சதுப்புநிலங்கள் மற்றும் நீலக் கார்பன் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதுடன், புறாத் தீவின் பவளப்பாறைகளைப் பாதுகாப்பதற்கான விசேட திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், திருகோணமலையில் உள்ள புள்ளிமான்களைப் பாதுகாப்பதற்கான விசேட திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை துறைமுக அதிகாரசபையினால் வர்த்தமானி அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் பொதுமக்கள் பயன்படுத்தும் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் கூட்டத்தில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரொசான் அக்மீமன மற்றும் எஸ். குகதாசன் உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

திருகோணமலையில் சுற்றாடலுக்கு கடும் பாதுகாப்பு; அபிவிருத்தி தொடர்பில் பல முக்கிய தீர்மானங்கள் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (25) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயேந்தலால் ரத்னசேகர ஆகியோரின் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.மாவட்ட அரசாங்க அதிபர் W. G. M. ஹேமச்சந்திராவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயகொடி கலந்துகொண்டு விசேட உரையாற்றினார்.திருகோணமலை மாவட்டத்தின் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த சுற்றாடல் பிரதி அமைச்சர்,சட்டவிரோத மற்றும் முறையற்ற மணல் அகழ்வுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.குறிப்பாக, மாவட்டத்தில் சுற்றாடல் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவதுடன், கடந்த காலங்களில் வன எல்லைகளுக்குள் வழங்கப்பட்ட மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை மீளாய்வு செய்யவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.இதனுடன், மாவட்டத்தில் அதிகரித்து வரும் மனித–யானை மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது. காணி விடுவிப்பு தொடர்பான எல்லைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.எல் நினோ காலநிலை மாற்ற நிலைமையை எதிர்கொள்வதற்கான மாவட்டத்தின் தயார்நிலை குறித்தும் அனர்த்த மேலாண்மைப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ். சுகுணதாசன் விளக்கமளித்தார்.மேலும், திண்மக்கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், கடலரிப்பைத் தடுப்பதற்கான மாவட்ட ரீதியிலான செயற்திட்டத்தை உருவாக்குதல் மற்றும் கடல், கடலோர சுற்றுலாத் தளங்களைப் பாதிக்கும் கழிவுநீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.சாம்பல்தீவு களப்பு உள்ளிட்ட கண்டல் தாவரங்கள், சதுப்புநிலங்கள் மற்றும் நீலக் கார்பன் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதுடன், புறாத் தீவின் பவளப்பாறைகளைப் பாதுகாப்பதற்கான விசேட திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.அத்துடன், திருகோணமலையில் உள்ள புள்ளிமான்களைப் பாதுகாப்பதற்கான விசேட திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.இலங்கை துறைமுக அதிகாரசபையினால் வர்த்தமானி அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் பொதுமக்கள் பயன்படுத்தும் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் கூட்டத்தில் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.இந்தக் கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரொசான் அக்மீமன மற்றும் எஸ். குகதாசன் உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement