தவறு செய்யும் அரச ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் சுனில் வடகல எச்சரித்துள்ளார்.
தனியார் வானொலியொன்றிற்கு கருத்து வெளியிடும் போதே பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தில் தற்போதைக்கு 21 ஆயிரம் வெற்றிடங்கள் நிலவுகின்றன.
ஆயினும் அதனைக் கருத்திற்கொள்ளாது தவறு செய்த 300 பொலிஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று தவறு செய்யும் அரச ஊழியர்கள் எவராக இருப்பினும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொதுமக்களை இணைக்கும் செயற்திட்டமொன்று விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தவறு செய்யும் அரச ஊழியர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை அமைச்சர் சுனில் எச்சரிக்கை தவறு செய்யும் அரச ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் சுனில் வடகல எச்சரித்துள்ளார்.தனியார் வானொலியொன்றிற்கு கருத்து வெளியிடும் போதே பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.பொலிஸ் திணைக்களத்தில் தற்போதைக்கு 21 ஆயிரம் வெற்றிடங்கள் நிலவுகின்றன.ஆயினும் அதனைக் கருத்திற்கொள்ளாது தவறு செய்த 300 பொலிஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அதேபோன்று தவறு செய்யும் அரச ஊழியர்கள் எவராக இருப்பினும் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொதுமக்களை இணைக்கும் செயற்திட்டமொன்று விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.