• Apr 29 2026

கும்புருபிட்டி தேவிக்கல் கடற்கரையை சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

shanu / Apr 29th 2026, 2:11 pm
image

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். குகதாசன், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 

கும்புருபிட்டி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள தேவிக்கல் சுற்றுலா கடற்கரை பகுதியை இன்று (29) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.


இப்பகுதியில் வசிக்கும் சுமார் 4000-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்தப் பகுதியை ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்வது குறித்து அப்பகுதி மக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்காக இந்த விஜயம் அமைந்தது.


இலங்கை தமிழரசு கட்சியின் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் முருகையா ரவீந்திரன் விடுத்த அழைப்பின் பேரிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். குகதாசன் இந்த கள விஜயத்தை மேற்கொண்டார்.


இதன்போது, அப்பகுதியின் இயற்கை வளங்களை சுற்றுலாத் துறைக்கு ஏதுவான வகையில் எவ்வாறு திட்டமிடுவது என்பது குறித்தும், எதிர்காலத்தில் இப்பகுதி அபிவிருத்தி அடைந்தால் அந்த சமூக மக்கள் அடையும் நன்மைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.


இந்த நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் தனூஷன் , சமூக ஆர்வலர்கள், பிரதேச வாசிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

கும்புருபிட்டி தேவிக்கல் கடற்கரையை சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். குகதாசன், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கும்புருபிட்டி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள தேவிக்கல் சுற்றுலா கடற்கரை பகுதியை இன்று (29) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.இப்பகுதியில் வசிக்கும் சுமார் 4000-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்தப் பகுதியை ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்வது குறித்து அப்பகுதி மக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்காக இந்த விஜயம் அமைந்தது.இலங்கை தமிழரசு கட்சியின் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் முருகையா ரவீந்திரன் விடுத்த அழைப்பின் பேரிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். குகதாசன் இந்த கள விஜயத்தை மேற்கொண்டார்.இதன்போது, அப்பகுதியின் இயற்கை வளங்களை சுற்றுலாத் துறைக்கு ஏதுவான வகையில் எவ்வாறு திட்டமிடுவது என்பது குறித்தும், எதிர்காலத்தில் இப்பகுதி அபிவிருத்தி அடைந்தால் அந்த சமூக மக்கள் அடையும் நன்மைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.இந்த நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் தனூஷன் , சமூக ஆர்வலர்கள், பிரதேச வாசிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement