கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகிலுள்ள காணியில் சட்டவிரோதமாக கொட்டப்படும் குப்பை கூழங்களால் நிரம்பி வழிவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் கோவில் காணியில் தினந்தோறும் குப்பைகள் கொட்டப்படுவதால், வீதியின் இருபுறங்களிலும் குப்பை மேடுகள் தேங்கி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சிக்காக செல்லும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், காற்றின் தாக்கத்தால் குறித்த குப்பைகள் அருகிலுள்ள கடற்கரை பகுதிகளுக்கும் பரவி சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி வருகின்றன.
காணியில் கொட்டப்படும் குப்பைகளில் பியர் டின்கள், பிளாஸ்டிக் கலன்கள் உள்ளிட்ட எளிதில் உக்காத பொருட்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குப்பைகளில் நீர் தேங்கி நிற்பதன் மூலம் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது.
மேலும், கல்முனை கடற்கரை பள்ளிவாசல் அருகில் அமைந்துள்ள இந்த காணியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குப்பைகளை நாய்கள், மாடுகள் மற்றும் காகங்கள் கிழித்து பரப்புவதால் அயல் பகுதிகளில் உள்ள கிணறுகள் மற்றும் கால்வாய்களும் அசுத்தமடைவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரச்சினைக்கு தீர்வு காண கல்முனை மாநகர சபை இதுவரை போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குப்பை கூழங்களால் துர்நாற்றம் கல்முனை கண்ணகி அம்மன் காணியின் நிலை கல்முனை கண்ணகி அம்மன் கோவில் அருகிலுள்ள காணியில் சட்டவிரோதமாக கொட்டப்படும் குப்பை கூழங்களால் நிரம்பி வழிவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கண்ணகி அம்மன் கோவில் காணியில் தினந்தோறும் குப்பைகள் கொட்டப்படுவதால், வீதியின் இருபுறங்களிலும் குப்பை மேடுகள் தேங்கி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சிக்காக செல்லும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும், காற்றின் தாக்கத்தால் குறித்த குப்பைகள் அருகிலுள்ள கடற்கரை பகுதிகளுக்கும் பரவி சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தி வருகின்றன.காணியில் கொட்டப்படும் குப்பைகளில் பியர் டின்கள், பிளாஸ்டிக் கலன்கள் உள்ளிட்ட எளிதில் உக்காத பொருட்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குப்பைகளில் நீர் தேங்கி நிற்பதன் மூலம் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது.மேலும், கல்முனை கடற்கரை பள்ளிவாசல் அருகில் அமைந்துள்ள இந்த காணியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமாக குப்பைகள் கொட்டப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குப்பைகளை நாய்கள், மாடுகள் மற்றும் காகங்கள் கிழித்து பரப்புவதால் அயல் பகுதிகளில் உள்ள கிணறுகள் மற்றும் கால்வாய்களும் அசுத்தமடைவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், பிரச்சினைக்கு தீர்வு காண கல்முனை மாநகர சபை இதுவரை போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.