• Mar 08 2026

முல்லைத்தீவு, வவுனியா வடக்கில் நெற்கொள்வனவை விரைந்து ஆரம்பியுங்கள் - ரவிகரன் எம்.பி!

shanu / Feb 14th 2026, 5:39 pm
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளை நிறைத்துள்ள ஏற்கனவே கொள்வனவுசெய்யப்பட்ட நெல்லை அகற்றி விரைந்து நெற்கொள்வனவை ஆரம்பிப்பதுடன், வவுனியா வடக்கிலும் நெல் சந்தைப்படுத்தல் சபை விரைந்து நெற்கொள்வனவை ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கூட்டுறவுப் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.


இந்நிலையில் களஞ்சியசாலைகளில் நிறைந்துள்ள நெல்லை உரியவகையில் அகற்றி விரைவாக விவசாயிகளிடமிருந்து நெல்சந்தைப்படுத்தல் சபையால் நெற்கொள்வனவவை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனாபிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க இதன்போது பதிலளித்துள்ளார்.


வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.


இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,


வவுனியா வடக்கில் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் எம்மிடம் முறையிட்டுள்ளனர். இதேநிலையே முல்லைத்தீவிலும் காணப்படுகின்றது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்புப் பகுதியில் மாத்திரமே நெல்சந்தைப்படுத்தல் சபையினால் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படுகின்றது.


கடந்த வருடம் சிறுபோக காலத்தில் கொள்வனவுசெய்யப்பட்ட நெல் மூட்டைகள், நெல் சந்தைப்படுத்தல் சபைக்குரிய ஏனைய களஞ்சியசாலைகளிலிருந்து அகற்றப்படாமல் நிறைந்து காணப்படுவதாக சொல்லப்படுகின்றது. எனவேதான் நெற்கொள்வனவு இடம்பெறவில்லை என்றும் சொல்லப்படுகின்றது.


நெல் சந்தைப்படுத்தல் சபையால் முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் மேற்கொள்ளப்படும் நெற்கொள்வனவுச் செயற்பாட்டை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன், நெல்சந்தைப்படுத்தல் சபையின் உதவிப் பிராந்திய முகாமையாளரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தேன். நெற்கொள்வனவை மேற்கொள்வதற்கு களஞ்சியசாலைகள் இல்லாத நிலை காணப்படுவதாக அவரும் என்னிடம் முறையிட்டுள்ளார்.


அதேவேளை முறிப்பில் நெற்கொள்வனவு இடம்பெறுவதைப்போல ஏனைய இடங்களிலும் நெற்கொள்வனவுச் செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டுமென விவசாயிகளாலும் என்னிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.


நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஈரப்பதனான நெல் கொள்வனவுசெய்யப்படுவதில்லை என்பதால் பலத்த இடர்பாடுகளுக்கு மத்தியில் மோசமான காலநிலை மாற்றம் மற்றும் காட்டுயானைகளின் அட்டகாசம் என்பவற்றை எதிர்கொண்டு வீதிகளில் நெல்லை உலரவைத்து நெல்சந்தைப்படுத்தல் சபையின் நெற்கொள்வனவு எப்போது இடம்பெறுமென எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.


அத்தோடு இவ்வாறு நெல்சந்தைப்படுத்தல் சபை உரிய்காலத்தில் நெற்கொள்வனவை ஆரம்பிக்காததால் தனியார் நெற்கொள்வனவாளர்களிடம் விவசாயிகள் குறைந்தவிலையில் நெல்வை விற்பனைசெய்து நட்டமடைகின்ற அவல நிலைகளும் ஏற்பட்டுள்ளன.


எனவே ஏற்கனவே கொள்வனவுசெய்யப்பட்டு முல்லைத்தீவு களஞ்சியசாலைகளில் நிறைத்துவைத்துள்ள நெல்லை அகற்றி உடனடியாக அனைத்து இடங்களிலும் நெற்கொள்வனவை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அதேபோல வவுனியா வடக்கிலும் உடனடியாக நெற்கொள்வனவை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத் தெரிவித்தார்.


இந்நிலையில் வவுனியாவடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், பிரதியமைச்சருமான உபாலி சமரசிங்க இதன்போது பதிலளிக்கையில், விவசாயிகளிடமிருந்து உரியகாலத்தில் நெற்கொள்வனவை மேற்கொள்வதற்கென கூட்டங்கள் நடாத்தப்பட்டு நெல்லுக்கான விலை நிர்ணயமும் செய்யப்பட்டது.


அத்தோடு ஏற்கனவே கொள்வனவுசெய்யப்பட்டு களஞ்சியசாலைகளில் உள்ள நெல்லை சதோச மற்றும் கூட்டுறவுச்சங்கங்களுக்கு வழங்கும்படி ஜனாதிபதியாலும் உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும் ஏற்கனவே கொள்வனவுசெய்த நெல்லை களஞ்சிய சாலைகளிலிருந்து உரியவகையில் அகற்றமுடியாதநிலை ஏற்பட்டது.


இதனாலேயே வடபகுதியில் கூடுதலான இடங்களில் நெல்அறுவடை நிறைவடைந்துள்ளபோதும் அனைத்து இடங்களிலும் முறையாக நெற்கொள்வனவை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


எனவே விரைவில் களஞ்சியசாலைகளிலுள்ள நெல் உரியவகையில் முற்றாக அகற்றப்பட்டு விவசாயிகளிடமிருந்து உரியவகையில் நெற்கொள்வனவை ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோமெனத் தெரிவித்தார்.

முல்லைத்தீவு, வவுனியா வடக்கில் நெற்கொள்வனவை விரைந்து ஆரம்பியுங்கள் - ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகளை நிறைத்துள்ள ஏற்கனவே கொள்வனவுசெய்யப்பட்ட நெல்லை அகற்றி விரைந்து நெற்கொள்வனவை ஆரம்பிப்பதுடன், வவுனியா வடக்கிலும் நெல் சந்தைப்படுத்தல் சபை விரைந்து நெற்கொள்வனவை ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கூட்டுறவுப் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.இந்நிலையில் களஞ்சியசாலைகளில் நிறைந்துள்ள நெல்லை உரியவகையில் அகற்றி விரைவாக விவசாயிகளிடமிருந்து நெல்சந்தைப்படுத்தல் சபையால் நெற்கொள்வனவவை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனாபிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க இதன்போது பதிலளித்துள்ளார்.வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,வவுனியா வடக்கில் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவில்லை என விவசாயிகள் எம்மிடம் முறையிட்டுள்ளனர். இதேநிலையே முல்லைத்தீவிலும் காணப்படுகின்றது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்புப் பகுதியில் மாத்திரமே நெல்சந்தைப்படுத்தல் சபையினால் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படுகின்றது.கடந்த வருடம் சிறுபோக காலத்தில் கொள்வனவுசெய்யப்பட்ட நெல் மூட்டைகள், நெல் சந்தைப்படுத்தல் சபைக்குரிய ஏனைய களஞ்சியசாலைகளிலிருந்து அகற்றப்படாமல் நிறைந்து காணப்படுவதாக சொல்லப்படுகின்றது. எனவேதான் நெற்கொள்வனவு இடம்பெறவில்லை என்றும் சொல்லப்படுகின்றது.நெல் சந்தைப்படுத்தல் சபையால் முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் மேற்கொள்ளப்படும் நெற்கொள்வனவுச் செயற்பாட்டை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன், நெல்சந்தைப்படுத்தல் சபையின் உதவிப் பிராந்திய முகாமையாளரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தேன். நெற்கொள்வனவை மேற்கொள்வதற்கு களஞ்சியசாலைகள் இல்லாத நிலை காணப்படுவதாக அவரும் என்னிடம் முறையிட்டுள்ளார்.அதேவேளை முறிப்பில் நெற்கொள்வனவு இடம்பெறுவதைப்போல ஏனைய இடங்களிலும் நெற்கொள்வனவுச் செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டுமென விவசாயிகளாலும் என்னிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஈரப்பதனான நெல் கொள்வனவுசெய்யப்படுவதில்லை என்பதால் பலத்த இடர்பாடுகளுக்கு மத்தியில் மோசமான காலநிலை மாற்றம் மற்றும் காட்டுயானைகளின் அட்டகாசம் என்பவற்றை எதிர்கொண்டு வீதிகளில் நெல்லை உலரவைத்து நெல்சந்தைப்படுத்தல் சபையின் நெற்கொள்வனவு எப்போது இடம்பெறுமென எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.அத்தோடு இவ்வாறு நெல்சந்தைப்படுத்தல் சபை உரிய்காலத்தில் நெற்கொள்வனவை ஆரம்பிக்காததால் தனியார் நெற்கொள்வனவாளர்களிடம் விவசாயிகள் குறைந்தவிலையில் நெல்வை விற்பனைசெய்து நட்டமடைகின்ற அவல நிலைகளும் ஏற்பட்டுள்ளன.எனவே ஏற்கனவே கொள்வனவுசெய்யப்பட்டு முல்லைத்தீவு களஞ்சியசாலைகளில் நிறைத்துவைத்துள்ள நெல்லை அகற்றி உடனடியாக அனைத்து இடங்களிலும் நெற்கொள்வனவை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அதேபோல வவுனியா வடக்கிலும் உடனடியாக நெற்கொள்வனவை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத் தெரிவித்தார்.இந்நிலையில் வவுனியாவடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், பிரதியமைச்சருமான உபாலி சமரசிங்க இதன்போது பதிலளிக்கையில், விவசாயிகளிடமிருந்து உரியகாலத்தில் நெற்கொள்வனவை மேற்கொள்வதற்கென கூட்டங்கள் நடாத்தப்பட்டு நெல்லுக்கான விலை நிர்ணயமும் செய்யப்பட்டது.அத்தோடு ஏற்கனவே கொள்வனவுசெய்யப்பட்டு களஞ்சியசாலைகளில் உள்ள நெல்லை சதோச மற்றும் கூட்டுறவுச்சங்கங்களுக்கு வழங்கும்படி ஜனாதிபதியாலும் உத்தரவிடப்பட்டிருந்தது.எனினும் ஏற்கனவே கொள்வனவுசெய்த நெல்லை களஞ்சிய சாலைகளிலிருந்து உரியவகையில் அகற்றமுடியாதநிலை ஏற்பட்டது.இதனாலேயே வடபகுதியில் கூடுதலான இடங்களில் நெல்அறுவடை நிறைவடைந்துள்ளபோதும் அனைத்து இடங்களிலும் முறையாக நெற்கொள்வனவை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே விரைவில் களஞ்சியசாலைகளிலுள்ள நெல் உரியவகையில் முற்றாக அகற்றப்பட்டு விவசாயிகளிடமிருந்து உரியவகையில் நெற்கொள்வனவை ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோமெனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement