அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
“நான் ஈரானுடன் ஒரு உடன்பாட்டிற்கு வருவதையே விரும்புகிறேன். நான் மக்களைக் கொல்ல விரும்பவில்லை” என டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், டிரம்பின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
போர் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்த்து, ஒப்பந்தம் ஒன்றின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்கா விரும்புகிறதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
ஈரான் தரப்பிலிருந்து இதற்கு என்ன பதில் வெளியாகும் என்பதும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது
ஈரானுடன் போர் வேண்டாம்-டிரம்பின் திடீர் அறிவிப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாக தெரிவித்துள்ளார்.“நான் ஈரானுடன் ஒரு உடன்பாட்டிற்கு வருவதையே விரும்புகிறேன். நான் மக்களைக் கொல்ல விரும்பவில்லை” என டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், டிரம்பின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.போர் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்த்து, ஒப்பந்தம் ஒன்றின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண அமெரிக்கா விரும்புகிறதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.ஈரான் தரப்பிலிருந்து இதற்கு என்ன பதில் வெளியாகும் என்பதும் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது