• Apr 25 2026

வேலணையில் உதயமாகும் ‘Star Gold’ தொழிற்சாலை - 50 க்கும் மேற்பட்டோருக்கு உடனடித் தொழில் வாய்ப்பு!

shanu / Apr 24th 2026, 11:32 am
image

யாழ்ப்பாணம் வேலணையில், உள்ளூர் மனிதவளத்தை மேம்படுத்தும் நோக்கோடும் அவ்வூர் இளைஞர் யுவதிகளுக்கான புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் இலக்கோடும் Star Gold நிறுவனம் தனது சர்வதேச தரம் மிக்க உற்பத்திப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.


​வேலணை நகர்  வங்களாவடியை அண்மித்த பகுதியில் இந்தியத் தொழில்நுட்பத்தின் (Indian Technology) உதவியுடன் பல கோடி ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக வேலணைப் பகுதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு இந்நிறுவனத்தினூடாக நேரடி வேலைவாய்ப்புகளை வழங்கப்பட்டுள்ளது.


Star Gold நிறுவனத்தின் பிரதான உற்பத்தியாக நூடில்ஸ் (Noodles) அமையும் அதேவேகையில், உயர்தரமான அரிசிமா, அவித்த மா, மற்றும் மிளகாய்த்தூள் போன்ற அத்தியாவசியப் பொருட்களும் உற்பத்தி செய்யப்படவுள்ளன.


உள்ளூர் சந்தையில் மலிவான விலையில் தரமான பொருட்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள அதேவேளை, இப்பொருட்கள் சர்வதேச  ஏற்றுமதி தரம் வாய்ந்ததாகவும் உற்பத்தி செய்யப்படவுள்ளதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


அதிநவீன இயந்திரங்களுடன் தயார் நிலையில் உள்ள இந்தத் தொழிற்சாலை, எதிர்வரும் மாதம் தனது வணிக ரீதியான உற்பத்திச் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளது.


​இவ்வேலைத்திட்டமானது வேலணைப் பகுதியின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

வேலணையில் உதயமாகும் ‘Star Gold’ தொழிற்சாலை - 50 க்கும் மேற்பட்டோருக்கு உடனடித் தொழில் வாய்ப்பு யாழ்ப்பாணம் வேலணையில், உள்ளூர் மனிதவளத்தை மேம்படுத்தும் நோக்கோடும் அவ்வூர் இளைஞர் யுவதிகளுக்கான புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் இலக்கோடும் Star Gold நிறுவனம் தனது சர்வதேச தரம் மிக்க உற்பத்திப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.​வேலணை நகர்  வங்களாவடியை அண்மித்த பகுதியில் இந்தியத் தொழில்நுட்பத்தின் (Indian Technology) உதவியுடன் பல கோடி ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக வேலணைப் பகுதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு இந்நிறுவனத்தினூடாக நேரடி வேலைவாய்ப்புகளை வழங்கப்பட்டுள்ளது.Star Gold நிறுவனத்தின் பிரதான உற்பத்தியாக நூடில்ஸ் (Noodles) அமையும் அதேவேகையில், உயர்தரமான அரிசிமா, அவித்த மா, மற்றும் மிளகாய்த்தூள் போன்ற அத்தியாவசியப் பொருட்களும் உற்பத்தி செய்யப்படவுள்ளன.உள்ளூர் சந்தையில் மலிவான விலையில் தரமான பொருட்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள அதேவேளை, இப்பொருட்கள் சர்வதேச  ஏற்றுமதி தரம் வாய்ந்ததாகவும் உற்பத்தி செய்யப்படவுள்ளதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.அதிநவீன இயந்திரங்களுடன் தயார் நிலையில் உள்ள இந்தத் தொழிற்சாலை, எதிர்வரும் மாதம் தனது வணிக ரீதியான உற்பத்திச் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளது.​இவ்வேலைத்திட்டமானது வேலணைப் பகுதியின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement