• May 09 2026

அம்பலாங்கொடையில் கத்திக்குத்து சம்பவம்: ஒருவர் உயிரிழப்பு

Aathira / May 9th 2026, 10:57 am
image

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (08) மதியம் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஆரம்ப விசாரணைகளின்படி, உயிரிழந்த நபருக்கும் மற்றொருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில், சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக தெரியவந்துள்ளது.

இதனால் படுகாயமடைந்த நபர் அம்பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அம்பலாங்கொடையில் கத்திக்குத்து சம்பவம்: ஒருவர் உயிரிழப்பு அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (08) மதியம் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பொலிஸ் ஆரம்ப விசாரணைகளின்படி, உயிரிழந்த நபருக்கும் மற்றொருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில், சந்தேகநபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக தெரியவந்துள்ளது.இதனால் படுகாயமடைந்த நபர் அம்பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement