• Apr 23 2026

சூர்யாவுடன் நடிக்க தயாரான இலங்கையர் திடீர் மரணம்

Chithra / Apr 22nd 2026, 1:09 pm
image

இந்தியத் திரைப்படமொன்றில் பாராளுமன்ற உறுப்பினராக நடிப்பதற்காக தயாராக இருந்த நபர் ஒருவர், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள கழிவறையில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மாத்தளை, களுதாவளை, ரத்தோட்டை வீதியை சேர்ந்த 52 வயதுடைய அழகர் கருப்புசாமி  எனும் திருமணமாகாத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இந்தியாவின் முன்னணி நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா கிருஷ்ணன் ஆகியோரின் பங்கேற்புடன், இந்திய பாராளுமன்றத்தை பிரதிபலிக்கும் வகையிலான படப்பிடிப்பு ஒன்று பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருந்தது. 


இதில் நடிப்பதற்காகவே குறித்த நபர் தயாராக இருந்தமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கழிவறையில் விழுந்து கிடந்த குறித்த நபர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இந்நிலையில் குறித்த நபர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 


இந்நிலையில் நேற்றையதினம்  நடிகர் சூர்யா மற்றும் பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது விமான நிலையத்திலேயே அவரை வரவேற்க ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

சூர்யாவுடன் நடிக்க தயாரான இலங்கையர் திடீர் மரணம் இந்தியத் திரைப்படமொன்றில் பாராளுமன்ற உறுப்பினராக நடிப்பதற்காக தயாராக இருந்த நபர் ஒருவர், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள கழிவறையில் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மாத்தளை, களுதாவளை, ரத்தோட்டை வீதியை சேர்ந்த 52 வயதுடைய அழகர் கருப்புசாமி  எனும் திருமணமாகாத நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்தியாவின் முன்னணி நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா கிருஷ்ணன் ஆகியோரின் பங்கேற்புடன், இந்திய பாராளுமன்றத்தை பிரதிபலிக்கும் வகையிலான படப்பிடிப்பு ஒன்று பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருந்தது. இதில் நடிப்பதற்காகவே குறித்த நபர் தயாராக இருந்தமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கழிவறையில் விழுந்து கிடந்த குறித்த நபர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த நபர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் நேற்றையதினம்  நடிகர் சூர்யா மற்றும் பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது விமான நிலையத்திலேயே அவரை வரவேற்க ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement