• Feb 14 2026

கொட்டும் மழையிலும் விளையாட்டுப்போட்டி; மகிழ்ச்சியுடன் உற்சாகமாக விளையாடிய மாணவர்கள்!

shanuja / Feb 13th 2026, 6:07 pm
image

முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நேற்றைய தினம் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. 


விளையாட்டுப்போட்டி இடம்பெற்ற வேளையில் பலத்த மழை விடாது பெய்துள்ளது. இதன்போது மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாட்டுக்களில் பங்குபற்றியுள்ளனர். 


பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலை அதிபர் செ.மேகநாதன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது. 


பிரதம விருந்தினர்கள் பாண்ட் வாத்தியத்துடன் வரவேற்கப்பட்டதையடுத்து அணிநடை வகுப்பு  இடம்பெற்றது. தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு தடகளப் போட்டிகள் இடம்பெற்றன. 


இடைவேளையில் மாணவர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சியும், கராத்தே காட்சியும் பார்வையாளர்களை கவர்ந்தது. 


போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பிரதம விருந்தினருக்கான நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.


விளையாட்டுக்களின் இடையே மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. பின்னர் மழை இடைவிடாது கொட்டியுள்ளது. 


இதன்போது பெரிய மாணவர்கள் கொட்டும் மழையிலும் தமது விளையாட்டுக்களில் உற்சாகமாக கலந்துகொண்டனர். 


சிறிய மாணவர்களுக்கு ஆசான்கள் குடைகளைப் பிடித்தவாறு விளையாட வைத்தனர். 


மழையை பொருட்படுத்தாது மாணவர்கள் காட்டிய உற்சாகமும் ஒற்றுமையும் நிகழ்வை மேலும் சிறப்பித்துள்ளது.

கொட்டும் மழையிலும் விளையாட்டுப்போட்டி; மகிழ்ச்சியுடன் உற்சாகமாக விளையாடிய மாணவர்கள் முல்லைத்தீவு வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நேற்றைய தினம் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. விளையாட்டுப்போட்டி இடம்பெற்ற வேளையில் பலத்த மழை விடாது பெய்துள்ளது. இதன்போது மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாட்டுக்களில் பங்குபற்றியுள்ளனர். பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலை அதிபர் செ.மேகநாதன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது. பிரதம விருந்தினர்கள் பாண்ட் வாத்தியத்துடன் வரவேற்கப்பட்டதையடுத்து அணிநடை வகுப்பு  இடம்பெற்றது. தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு தடகளப் போட்டிகள் இடம்பெற்றன. இடைவேளையில் மாணவர்களின் கண்கவர் நடன நிகழ்ச்சியும், கராத்தே காட்சியும் பார்வையாளர்களை கவர்ந்தது. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பிரதம விருந்தினருக்கான நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.விளையாட்டுக்களின் இடையே மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. பின்னர் மழை இடைவிடாது கொட்டியுள்ளது. இதன்போது பெரிய மாணவர்கள் கொட்டும் மழையிலும் தமது விளையாட்டுக்களில் உற்சாகமாக கலந்துகொண்டனர். சிறிய மாணவர்களுக்கு ஆசான்கள் குடைகளைப் பிடித்தவாறு விளையாட வைத்தனர். மழையை பொருட்படுத்தாது மாணவர்கள் காட்டிய உற்சாகமும் ஒற்றுமையும் நிகழ்வை மேலும் சிறப்பித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement