• May 11 2026

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தண்டனை வழங்குவதை விரைவுபடுத்துக! - ஜனாதிபதி கடும் எச்சரிக்கை

Chithra / May 8th 2026, 7:55 am
image

இலங்கையிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் மறுசீரமைப்புகளை மிக விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குக் கடும் உத்தரவு பிறப்பித்தார்.


ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டுச் சபையின் கூட்டத்திலேயே அவர் இதனை வலியுறுத்தினார்.


கைப்பற்றப்படும் போதைப்பொருள்கள் மீண்டும் எக்காரணம் கொண்டும் சமூகத்துக்குள் ஊடுருவுவதைத் தடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி எச்சரித்தார். அவற்றைச் சட்டபூர்வமான நடைமுறைகளின் கீழ் விரைவாக அழிப்பதற்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குத் தண்டனை வழங்கும் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்கும் அவர் அறிவுறுத்தினார்.


"முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட 2025 அக்டோபர் 30 முதல் இதுவரை கிடைத்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. அதன் விவரங்கள் வருமாறு:-


* கைது செய்யப்பட்டவர்கள்: ஒரு இலட்சத்து 68 ஆயிரத்து 460 சந்தேகநபர்கள்.

* கைப்பற்றப்பட்டவை: சுமார் 5437 கிலோ கஞ்சா, 1936 கிலோ ஹெரோயின், 1991 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் 15 இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகள்.


இந்தச் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சுற்றிவளைப்புகள் 80 வீதத்தால் அதிகரித்துள்ளன என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.


போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காக 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வு (திருத்த) சட்டமூலத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


புனர்வாழ்வு பெற்றவர்கள் மீண்டும் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க சுயதொழில் பயிற்சிகள் மற்றும் மனப்பாங்கு அபிவிருத்தித் திட்டங்களை மத வழிபாட்டுத் தலங்களை மையப்படுத்தி முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.


போதைப்பொருள் தொடர்பான வழக்குகளுக்காகத் தனியான நீதிமன்றத்தை நிறுவுதல் மற்றும் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாகப் பெற்று வழக்குத் தொடர்வதை துரிதப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சிறைச்சாலை நெரிசலைத் தவிர்க்க போதைப்பொருள் குற்றவாளிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்துமாறும் அவர் குறிப்பிட்டார்.


பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுக்க கல்வி அமைச்சு மற்றும் மகளிர் பணியகம் இணைந்து விசேட திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், ஜூன் 26 சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பாரிய விழிப்புணர்வுப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் மகா சங்கத்தினர், மதத் தலைவர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தண்டனை வழங்குவதை விரைவுபடுத்துக - ஜனாதிபதி கடும் எச்சரிக்கை இலங்கையிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் மறுசீரமைப்புகளை மிக விரைவாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்குக் கடும் உத்தரவு பிறப்பித்தார்.ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டுச் சபையின் கூட்டத்திலேயே அவர் இதனை வலியுறுத்தினார்.கைப்பற்றப்படும் போதைப்பொருள்கள் மீண்டும் எக்காரணம் கொண்டும் சமூகத்துக்குள் ஊடுருவுவதைத் தடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி எச்சரித்தார். அவற்றைச் சட்டபூர்வமான நடைமுறைகளின் கீழ் விரைவாக அழிப்பதற்கும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குத் தண்டனை வழங்கும் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்கும் அவர் அறிவுறுத்தினார்."முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட 2025 அக்டோபர் 30 முதல் இதுவரை கிடைத்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. அதன் விவரங்கள் வருமாறு:-* கைது செய்யப்பட்டவர்கள்: ஒரு இலட்சத்து 68 ஆயிரத்து 460 சந்தேகநபர்கள்.* கைப்பற்றப்பட்டவை: சுமார் 5437 கிலோ கஞ்சா, 1936 கிலோ ஹெரோயின், 1991 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் 15 இலட்சத்திற்கும் அதிகமான போதை மாத்திரைகள்.இந்தச் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சுற்றிவளைப்புகள் 80 வீதத்தால் அதிகரித்துள்ளன என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காக 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வு (திருத்த) சட்டமூலத்தை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்றவர்கள் மீண்டும் போதைக்கு அடிமையாவதைத் தடுக்க சுயதொழில் பயிற்சிகள் மற்றும் மனப்பாங்கு அபிவிருத்தித் திட்டங்களை மத வழிபாட்டுத் தலங்களை மையப்படுத்தி முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.போதைப்பொருள் தொடர்பான வழக்குகளுக்காகத் தனியான நீதிமன்றத்தை நிறுவுதல் மற்றும் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவாகப் பெற்று வழக்குத் தொடர்வதை துரிதப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சிறைச்சாலை நெரிசலைத் தவிர்க்க போதைப்பொருள் குற்றவாளிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்துமாறும் அவர் குறிப்பிட்டார்.பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுக்க கல்வி அமைச்சு மற்றும் மகளிர் பணியகம் இணைந்து விசேட திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், ஜூன் 26 சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பாரிய விழிப்புணர்வுப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் மகா சங்கத்தினர், மதத் தலைவர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement