இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் தற்போதைய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்று (08) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில், மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த பல மாதங்களாக நிலவிய கடும் வெப்பமான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்திருந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் மீண்டும் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.
மழையால் சாமிமலை ஓயா, மறே ஓயா, சியத்தல கங்குல ஓயா, காட்மோர் ஓயா உள்ளிட்ட நீரோடைகளிலும், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீரை வழங்கும் பொகவந்தலாவ ஓயா, கெசல்கமு ஓயா, ஹட்டன் ஓயா போன்ற பிரதான கங்கைகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
அதேபோல், தலவாக்கலை பகுதியில் உள்ள மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீரை வழங்கும் மகாவலி கங்கையிலும் நீரின் அளவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தொடர்ச்சியான மழை காரணமாக பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் தொழிலாளர்கள், பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மழை பெய்யும் நேரங்களில் ஆறுகள் மற்றும் நீரோடைகளில் நீராடுவதையும், அவற்றின் அருகில் செல்வதையும் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று முதல் இடி மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்து வருகிறது.
பதுளை நகரம், பண்டாரவளை, ஹாலி எல, பசறை உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழையுடன் மோசமான வானிலை நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியான மழையால் சில தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன், போக்குவரத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் காணப்படுவதால் தேவையற்ற வெளிப்புற பயணங்களை தவிர்க்குமாறும், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டில் இன்றும் பலத்த மழை; நீர்த்தேக்கங்கள் நிரம்பும் அபாயம் மக்களுக்கு அவசர எச்சரிக்கை இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் தற்போதைய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (08) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில், மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.இந்த கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த பல மாதங்களாக நிலவிய கடும் வெப்பமான வானிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்திருந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் மீண்டும் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.மழையால் சாமிமலை ஓயா, மறே ஓயா, சியத்தல கங்குல ஓயா, காட்மோர் ஓயா உள்ளிட்ட நீரோடைகளிலும், காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீரை வழங்கும் பொகவந்தலாவ ஓயா, கெசல்கமு ஓயா, ஹட்டன் ஓயா போன்ற பிரதான கங்கைகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.அதேபோல், தலவாக்கலை பகுதியில் உள்ள மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீரை வழங்கும் மகாவலி கங்கையிலும் நீரின் அளவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும், தொடர்ச்சியான மழை காரணமாக பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் தொழிலாளர்கள், பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.மழை பெய்யும் நேரங்களில் ஆறுகள் மற்றும் நீரோடைகளில் நீராடுவதையும், அவற்றின் அருகில் செல்வதையும் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று முதல் இடி மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்து வருகிறது.பதுளை நகரம், பண்டாரவளை, ஹாலி எல, பசறை உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழையுடன் மோசமான வானிலை நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.தொடர்ச்சியான மழையால் சில தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதுடன், போக்குவரத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் காணப்படுவதால் தேவையற்ற வெளிப்புற பயணங்களை தவிர்க்குமாறும், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.