மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் இன்று சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் மாலை 7:00 மணி வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலில் இருக்கும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கொழும்பு சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ஒரு சிறப்பு போக்குவரத்துத் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, மாற்று வீதியை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளை பொலிஸார் கோரியுள்ளனர்.
மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதி சடங்கு இன்று பூரண அரச அனுசரணையுடன் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இலங்கை சினிமாவின் ராணியாக கருதப்படும் மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
சுதந்திர சதுக்கத்தைச் சுற்றி விஷேட போக்குவரத்து திட்டம் மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் இன்று சிறப்பு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.இன்று காலை முதல் மாலை 7:00 மணி வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலில் இருக்கும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.மேலும், கொழும்பு சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதியில் ஒரு சிறப்பு போக்குவரத்துத் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மாற்று வீதியை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளை பொலிஸார் கோரியுள்ளனர். மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதி சடங்கு இன்று பூரண அரச அனுசரணையுடன் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இலங்கை சினிமாவின் ராணியாக கருதப்படும் மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.