• Oct 17 2026

1972ஆம் ஆண்டு கிண்ணியாவில் சுவீகரிக்கப்பட்ட LRC காணிகள் தொடர்பில் விசேட உபகுழு

Aathira / Oct 16th 2026, 7:35 am
image

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) காணி சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் 1972ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், விசேட உபகுழுவொன்றை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அதன் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நேற்று (15) நடைபெற்றபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஃரூப் நகர், பைசல் நகர், அண்ணல் நகர், உப்பாறு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், நீண்டகாலமாக முறையான காணி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் உரிய காணி ஆவணங்கள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.

இதனால், அவர்கள் பல்வேறு அடிப்படை வசதிகளையும் அரச சேவைகளையும் பெற்றுக்கொள்வதில் தொடர்ச்சியான சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறித்த காணிகள் தொடர்பான முழுமையான தகவல்களைத் திரட்டுதல், காணிகளின் தற்போதைய நிலைமையை ஆராய்தல் மற்றும் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை அடையாளம் காணுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த உபகுழு அமைக்கப்பட்டுள்ளது.

பிரதி அமைச்சரின் இணைப்பாளரும் கிண்ணியா அபிவிருத்திக் குழு இணைப்பாளருமான எம்.ஈ.எம். ராபிக் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, இந்த உபகுழுவை அமைப்பதற்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டு, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

காணி ஆவணங்கள் இல்லாததால் பல்வேறு சிரமங்கள்

முறையான காணி ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், அரச காணிகளில் நீண்டகாலமாகக் குடியிருந்து வரும் மக்கள் குடிநீர் வசதிகளைப் பெற்றுக்கொள்வது, மின்சார இணைப்புகளைப் பெற்றுக்கொள்வது, அரச உதவிகள் மற்றும் மானியங்களைப் பெறுவது, தமது குடியிருப்புகளை அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நஷ்டஈடுகள் மற்றும் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதிலும் அவர்கள் பல்வேறு தடைகளை எதிர்நோக்குவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

குறிப்பாக, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் இத்தகைய காணிப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகக் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இதுவரை நிரந்தரமான தீர்வு எட்டப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

காணிகளை முறையாகப் பகிர்ந்தளிக்கவும் ஆவணங்களை வழங்கவும் நடவடிக்கை

LRC காணிகள் தொடர்பான முழுமையான தரவுகளைத் திரட்டுவதன் மூலம், காணிகளின் உரிமை மற்றும் பயன்பாட்டு நிலைமைகளைத் தெளிவுபடுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஊடாக, தகுதியான மக்களுக்குக் காணிகளை முறையாகப் பகிர்ந்தளித்தல், நீண்டகாலமாகக் குடியிருந்து வரும் மக்களுக்கு உரிய காணி ஆவணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், அரச தேவைகளுக்கான காணிகளை அடையாளம் காணுதல் மற்றும் ஏற்கனவே உள்ள அரச காணிகளைப் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், காணி ஆவணங்கள் இன்றி நீண்டகாலமாக வாழ்ந்து வரும் குடும்பங்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் எனவும் நம்பப்படுகிறது.

திருகோணமலைக்கு தனியான LRC அலுவலகம் அமைக்க முயற்சி

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்துக்கெனத் தனியான காணி சீர்திருத்த ஆணைக்குழு (LRC) அலுவலகமொன்றை அமைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எம்.ஈ.எம். ராபிக் தெரிவித்தார்.

குறித்த அலுவலகத்தை அடுத்த வருடம் அமைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்துக்கெனத் தனியான LRC அலுவலகம் அமைக்கப்படுமானால், மாவட்டத்தில் நிலவும் LRC காணிகள் தொடர்பான பிணக்குகள் மற்றும் பிரச்சினைகளை விரைவாக ஆராய்ந்து, அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நீண்டகாலமாகக் காணி ஆவணங்கள் இன்றி வாழ்ந்து வரும் மக்களின் பிரச்சினைகளுக்கு இவ்வுபகுழுவின் ஊடாகத் தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளதுடன், உபகுழுவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் பரிந்துரைகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்

1972ஆம் ஆண்டு கிண்ணியாவில் சுவீகரிக்கப்பட்ட LRC காணிகள் தொடர்பில் விசேட உபகுழு திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) காணி சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் 1972ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், விசேட உபகுழுவொன்றை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அதன் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நேற்று (15) நடைபெற்றபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஃரூப் நகர், பைசல் நகர், அண்ணல் நகர், உப்பாறு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், நீண்டகாலமாக முறையான காணி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் உரிய காணி ஆவணங்கள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.இதனால், அவர்கள் பல்வேறு அடிப்படை வசதிகளையும் அரச சேவைகளையும் பெற்றுக்கொள்வதில் தொடர்ச்சியான சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.குறித்த காணிகள் தொடர்பான முழுமையான தகவல்களைத் திரட்டுதல், காணிகளின் தற்போதைய நிலைமையை ஆராய்தல் மற்றும் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை அடையாளம் காணுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த உபகுழு அமைக்கப்பட்டுள்ளது.பிரதி அமைச்சரின் இணைப்பாளரும் கிண்ணியா அபிவிருத்திக் குழு இணைப்பாளருமான எம்.ஈ.எம். ராபிக் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, இந்த உபகுழுவை அமைப்பதற்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டு, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.காணி ஆவணங்கள் இல்லாததால் பல்வேறு சிரமங்கள்முறையான காணி ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், அரச காணிகளில் நீண்டகாலமாகக் குடியிருந்து வரும் மக்கள் குடிநீர் வசதிகளைப் பெற்றுக்கொள்வது, மின்சார இணைப்புகளைப் பெற்றுக்கொள்வது, அரச உதவிகள் மற்றும் மானியங்களைப் பெறுவது, தமது குடியிருப்புகளை அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.அத்துடன், அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நஷ்டஈடுகள் மற்றும் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதிலும் அவர்கள் பல்வேறு தடைகளை எதிர்நோக்குவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.குறிப்பாக, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஐந்து கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் இத்தகைய காணிப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகக் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், இதுவரை நிரந்தரமான தீர்வு எட்டப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.காணிகளை முறையாகப் பகிர்ந்தளிக்கவும் ஆவணங்களை வழங்கவும் நடவடிக்கைLRC காணிகள் தொடர்பான முழுமையான தரவுகளைத் திரட்டுவதன் மூலம், காணிகளின் உரிமை மற்றும் பயன்பாட்டு நிலைமைகளைத் தெளிவுபடுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் ஊடாக, தகுதியான மக்களுக்குக் காணிகளை முறையாகப் பகிர்ந்தளித்தல், நீண்டகாலமாகக் குடியிருந்து வரும் மக்களுக்கு உரிய காணி ஆவணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், அரச தேவைகளுக்கான காணிகளை அடையாளம் காணுதல் மற்றும் ஏற்கனவே உள்ள அரச காணிகளைப் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், காணி ஆவணங்கள் இன்றி நீண்டகாலமாக வாழ்ந்து வரும் குடும்பங்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் எனவும் நம்பப்படுகிறது.திருகோணமலைக்கு தனியான LRC அலுவலகம் அமைக்க முயற்சிஇதேவேளை, திருகோணமலை மாவட்டத்துக்கெனத் தனியான காணி சீர்திருத்த ஆணைக்குழு (LRC) அலுவலகமொன்றை அமைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எம்.ஈ.எம். ராபிக் தெரிவித்தார்.குறித்த அலுவலகத்தை அடுத்த வருடம் அமைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.திருகோணமலை மாவட்டத்துக்கெனத் தனியான LRC அலுவலகம் அமைக்கப்படுமானால், மாவட்டத்தில் நிலவும் LRC காணிகள் தொடர்பான பிணக்குகள் மற்றும் பிரச்சினைகளை விரைவாக ஆராய்ந்து, அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.நீண்டகாலமாகக் காணி ஆவணங்கள் இன்றி வாழ்ந்து வரும் மக்களின் பிரச்சினைகளுக்கு இவ்வுபகுழுவின் ஊடாகத் தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளதுடன், உபகுழுவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் அதன் பரிந்துரைகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement