உலகளாவிய ரீதியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, இலங்கையில் அமைந்துள்ள அனைத்து தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டம் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை தொடர்ச்சியாக அமல்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இலங்கை பொலிஸ் தலைமையகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைப் பேணுவதற்கு இடையூறு விளைவிக்கக்கூடிய சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், பொலிஸ் மா அதிபரால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள்அவற்றின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள்தொடர்புடைய ஏனைய நிர்வாக கட்டிடங்கள்
இவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விசேட பாதுகாப்புத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
மேலும், நாட்டிற்கு வருகை தந்துள்ள மற்றும் இங்கு தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் உயிர் மற்றும் சொத்துப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன் கீழ்,அவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்புகள்,வர்த்தக நிலையங்கள்,சுற்றுலாத் தலங்கள்,மத வழிபாட்டுத் தலங்கள்
இவற்றின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படவுள்ளது.
தேவை ஏற்பட்டால் இந்த பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முப்படையினரின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டம் உலகளாவிய ரீதியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, இலங்கையில் அமைந்துள்ள அனைத்து தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.இத்திட்டம் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை தொடர்ச்சியாக அமல்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இலங்கை பொலிஸ் தலைமையகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைப் பேணுவதற்கு இடையூறு விளைவிக்கக்கூடிய சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், பொலிஸ் மா அதிபரால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய,தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்கள்அவற்றின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள்தொடர்புடைய ஏனைய நிர்வாக கட்டிடங்கள்இவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு விசேட பாதுகாப்புத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.மேலும், நாட்டிற்கு வருகை தந்துள்ள மற்றும் இங்கு தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் உயிர் மற்றும் சொத்துப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.இதன் கீழ்,அவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்புகள்,வர்த்தக நிலையங்கள்,சுற்றுலாத் தலங்கள்,மத வழிபாட்டுத் தலங்கள்இவற்றின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படவுள்ளது.தேவை ஏற்பட்டால் இந்த பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முப்படையினரின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.