கைத்தொழில் துறைக்குத் தேவையான எரிபொருளைத் தடையின்றி வழங்குவதற்காக அரசாங்கம் விசேட நடைமுறையொன்றின் கீழ் செயற்பட்டு வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
இன்று (17) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர்,
கட்டுமானம், உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் சேவைத் தொழில்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் எரிபொருள் வசதிகளைத் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த நடைமுறையின் கீழ் கைத்தொழில் அதிபர்களுக்கு கூகுள் ஊடாகப் பதிவு செய்துகொள்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளதுடன், இதுவரை சுமார் 750 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன் போது அவர்களின் எரிபொருள் தேவைகள், துறை மற்றும் போக்குவரத்துப் பயன்பாடு குறித்த விரிவான தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அந்தத் தகவல்கள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பப்பட்டு, வாராந்த ஒதுக்கீட்டின் அடிப்படையில் கைத்தொழில்களுக்கு நியாயமான முறையில் விநியோகிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
அத்துடன், நிறுவனங்கள் தமக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களையோ அல்லது தமது சொந்த விநியோக மையங்களையோ பெயரிடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதுடன், உரிய ஒப்பந்தங்கள் மூலம் விநியோகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, சுற்றுலாத் துறைக்கும் விசேட முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு வரிசையின்றி எரிபொருளை வழங்குவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கைத்தொழில் துறைக்கான எரிபொருள் விநியோகத்திற்கு விசேட நடைமுறை கைத்தொழில் துறைக்குத் தேவையான எரிபொருளைத் தடையின்றி வழங்குவதற்காக அரசாங்கம் விசேட நடைமுறையொன்றின் கீழ் செயற்பட்டு வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். இன்று (17) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், கட்டுமானம், உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் சேவைத் தொழில்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கும் எரிபொருள் வசதிகளைத் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த நடைமுறையின் கீழ் கைத்தொழில் அதிபர்களுக்கு கூகுள் ஊடாகப் பதிவு செய்துகொள்வதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளதுடன், இதுவரை சுமார் 750 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதன் போது அவர்களின் எரிபொருள் தேவைகள், துறை மற்றும் போக்குவரத்துப் பயன்பாடு குறித்த விரிவான தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். அந்தத் தகவல்கள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பப்பட்டு, வாராந்த ஒதுக்கீட்டின் அடிப்படையில் கைத்தொழில்களுக்கு நியாயமான முறையில் விநியோகிக்கப்படும் என அமைச்சர் கூறினார். அத்துடன், நிறுவனங்கள் தமக்கு அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களையோ அல்லது தமது சொந்த விநியோக மையங்களையோ பெயரிடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதுடன், உரிய ஒப்பந்தங்கள் மூலம் விநியோகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, சுற்றுலாத் துறைக்கும் விசேட முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு வரிசையின்றி எரிபொருளை வழங்குவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.