• May 19 2025

உயர்தர தொழிற் பாடத்துறைக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு

Chithra / May 19th 2025, 9:21 am
image


உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

இந்த வருடம் முதல் 608 பாடசாலைகளில் தொழிற் பாடத்துறை பிரிவு செயல்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

இந்தப் பாடப்பிரிவிற்கு மாணவர்களைச் சேர்க்கும் போது, ​​க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையத் தவறியது கருத்திற்கொள்ளப்படாது என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த பாடப்பிரிவில் கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள், தாங்கள் எதிர்பார்க்கும் பாடசாலை அதிபர்களிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர தொழிற் பாடத்துறைக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வருடம் முதல் 608 பாடசாலைகளில் தொழிற் பாடத்துறை பிரிவு செயல்படுத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்தப் பாடப்பிரிவிற்கு மாணவர்களைச் சேர்க்கும் போது, ​​க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடையத் தவறியது கருத்திற்கொள்ளப்படாது என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பாடப்பிரிவில் கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள், தாங்கள் எதிர்பார்க்கும் பாடசாலை அதிபர்களிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement