• Mar 26 2026

போதைப்பொருள் ஒழிப்புக்கான செயல்பாட்டுக் குழுக்களை அமைத்தல் தொடர்பான விசேட கூட்டம்!

shanu / Mar 25th 2026, 6:15 pm
image

போதைப்பொருள் ஒழிப்புக்கான 'தேசிய ஒன்றிணைந்து செயல்படும் திட்டத்தின்' கீழ் மாவட்ட செயல்பாட்டுக் குழுக்களை அமைத்தல் தொடர்பான விசேட கூட்டம் நேற்று (24) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.


பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜி.எம்.ஹேமந்த குமார மற்றும் முப்படை தளபதிகள், அரச அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.


போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்கும் "நாடும் ஒன்றாக" தேசிய செயற்திட்டத்தின் மாவட்டக் கிளைகள் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டன.


இந்நிகழ்வில் தலைமை உரை ஆற்றிய பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, போதைப்பொருள் ஒழிப்பில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துப் பேசினார்.


​இந்த கடத்தல் சங்கிலியில் எஞ்சியுள்ள ஏனைய இரண்டு முக்கிய இணைப்புகளையும் (விநியோகம் மற்றும் நுகர்வு) கண்டறிந்து அகற்றுவதே இந்த மாவட்டக் குழுக்களை அமைப்பதன் முக்கிய நோக்கமாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்புக்கான செயல்பாட்டுக் குழுக்களை அமைத்தல் தொடர்பான விசேட கூட்டம் போதைப்பொருள் ஒழிப்புக்கான 'தேசிய ஒன்றிணைந்து செயல்படும் திட்டத்தின்' கீழ் மாவட்ட செயல்பாட்டுக் குழுக்களை அமைத்தல் தொடர்பான விசேட கூட்டம் நேற்று (24) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜி.எம்.ஹேமந்த குமார மற்றும் முப்படை தளபதிகள், அரச அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்கும் "நாடும் ஒன்றாக" தேசிய செயற்திட்டத்தின் மாவட்டக் கிளைகள் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டன.இந்நிகழ்வில் தலைமை உரை ஆற்றிய பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, போதைப்பொருள் ஒழிப்பில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துப் பேசினார்.​இந்த கடத்தல் சங்கிலியில் எஞ்சியுள்ள ஏனைய இரண்டு முக்கிய இணைப்புகளையும் (விநியோகம் மற்றும் நுகர்வு) கண்டறிந்து அகற்றுவதே இந்த மாவட்டக் குழுக்களை அமைப்பதன் முக்கிய நோக்கமாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement