• Apr 16 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பில் விசேட அறிவிப்பு...!samugammedia

Ziya / Feb 12th 2024, 11:53 am
image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ் மாவட்ட செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, பிரதேச செயலகம், நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான ஏற்பாடுகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந் நிலையில் திருவிழாவிற்கு வருகை தரும் மக்களுக்காக யாழ் மாவட்ட செயலகம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம் மு.ப 10 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடும்.

கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவான்.நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்குதுறைகளில் இருந்து 23ஆம் திகதி காலை 5.00 மணி முதல் நண்பகல், 12.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.

குறிக்கட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்குதுறைகளில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1500 ஆகும்.

வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் படகுகளில் பயணம் செய்பவர்கள் தனித்தனிப் படகாக பயணத்தை மேற்கொள்ளாது,  குழுவாக இணைந்து பாதுகாப்பான முறையில் பயணிப்பதுடன் 23 ஆந் திகதி பிற்பகல் 6.00 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் யாத்திரிகர்கள் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் ஏற்பாடுகளுடன் வருகை தருதல் வேண்டும்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாகவுள்ளதால் மது பாவனைப் பொருட்கள் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பில் விசேட அறிவிப்பு.samugammedia கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ் மாவட்ட செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, பிரதேச செயலகம், நெடுந்தீவு மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான ஏற்பாடுகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந் நிலையில் திருவிழாவிற்கு வருகை தரும் மக்களுக்காக யாழ் மாவட்ட செயலகம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம் மு.ப 10 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடும்.கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவான்.நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்குதுறைகளில் இருந்து 23ஆம் திகதி காலை 5.00 மணி முதல் நண்பகல், 12.00 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.குறிக்கட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்குதுறைகளில் இருந்து பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம் ரூ.1500 ஆகும்.வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் படகுகளில் பயணம் செய்பவர்கள் தனித்தனிப் படகாக பயணத்தை மேற்கொள்ளாது,  குழுவாக இணைந்து பாதுகாப்பான முறையில் பயணிப்பதுடன் 23 ஆந் திகதி பிற்பகல் 6.00 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் யாத்திரிகர்கள் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் ஏற்பாடுகளுடன் வருகை தருதல் வேண்டும்.கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாகவுள்ளதால் மது பாவனைப் பொருட்கள் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement