• Mar 05 2026

சூரிய சக்தியில் இயங்கும் கழிவு அகற்றும் படகுகள் அங்குரார்ப்பணம்!

shanu / Jan 19th 2026, 5:18 pm
image

​கொழும்பு நகரின் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் "Clean Waterways - Beira Lake" (பேரே வாவியைப் பாதுகாக்கும் திட்டம்) திட்டத்தின்கீழ், சூரிய சக்தியினால் இயங்கும் நவீன கழிவு அகற்றும் படகுகளை (Solar-powered Waste Interceptors) அறிமுகப்படுத்தும் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (19-01-2026) கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டல் பேரே வாவிக்கரை வளாகத்தில் நடைபெற்றது. 


மேல் மாகாண சபை, HSBC வங்கி, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (SLLDC) மற்றும் Clean Ocean Force Lanka ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தத் திட்டமானது, நகர்ப்புற சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.


​பேரே வாவியைப் புனரமைப்பதற்கான விசேட செயலணியின் ஊடாக மேல் மாகாண ஆளுநரின் நேரடி வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் விசேட அம்சம், கொழும்பு நகரின் நீர்நிலைகளில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும் முழுமையாகச் சூரிய சக்தியினால் இயங்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகும்.


​மேல் மாகாண ஆளுநர் கௌரவ ஹனீப் யூசுப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் தெரசா ஓ மஹோனி, HSBC வங்கியின் முதன்மை நிறைவேற்று அதிகாரி மார்க் சர்ஜனர் (Mark Serjenour), பேரே வாவியைப் பாதுகாக்கும் திட்டத்தின் தலைவர் சத்துர கஹதவ ஆராய்ச்சி மற்றும் Clean Ocean Force அமைப்பின் முதன்மை நிறைவேற்று அதிகாரி ஜெரோம் பெர்னாண்டோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


 இந்தத் திட்டத்தின் மூலம் கொழும்பு நகரின் நீர்நிலைகள் மாசடைவதைத் தடுத்து, அவற்றைச் சூழல் நட்பு ரீதியில் நிலையாகப் பராமரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சூரிய சக்தியில் இயங்கும் கழிவு அகற்றும் படகுகள் அங்குரார்ப்பணம் ​கொழும்பு நகரின் நீர்நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் "Clean Waterways - Beira Lake" (பேரே வாவியைப் பாதுகாக்கும் திட்டம்) திட்டத்தின்கீழ், சூரிய சக்தியினால் இயங்கும் நவீன கழிவு அகற்றும் படகுகளை (Solar-powered Waste Interceptors) அறிமுகப்படுத்தும் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (19-01-2026) கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டல் பேரே வாவிக்கரை வளாகத்தில் நடைபெற்றது. மேல் மாகாண சபை, HSBC வங்கி, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (SLLDC) மற்றும் Clean Ocean Force Lanka ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தத் திட்டமானது, நகர்ப்புற சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.​பேரே வாவியைப் புனரமைப்பதற்கான விசேட செயலணியின் ஊடாக மேல் மாகாண ஆளுநரின் நேரடி வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டத்தின் விசேட அம்சம், கொழும்பு நகரின் நீர்நிலைகளில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கும் அவற்றைப் பராமரிப்பதற்கும் முழுமையாகச் சூரிய சக்தியினால் இயங்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகும்.​மேல் மாகாண ஆளுநர் கௌரவ ஹனீப் யூசுப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் தெரசா ஓ மஹோனி, HSBC வங்கியின் முதன்மை நிறைவேற்று அதிகாரி மார்க் சர்ஜனர் (Mark Serjenour), பேரே வாவியைப் பாதுகாக்கும் திட்டத்தின் தலைவர் சத்துர கஹதவ ஆராய்ச்சி மற்றும் Clean Ocean Force அமைப்பின் முதன்மை நிறைவேற்று அதிகாரி ஜெரோம் பெர்னாண்டோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்தத் திட்டத்தின் மூலம் கொழும்பு நகரின் நீர்நிலைகள் மாசடைவதைத் தடுத்து, அவற்றைச் சூழல் நட்பு ரீதியில் நிலையாகப் பராமரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement