• May 02 2026

யாழில் க.பொ.த உயர்தர பரீட்சை நிலையங்களில் புகை...! மாநகர சபை நடவடிக்கை...!samugammedia

Ziya / Jan 4th 2024, 11:20 am
image

கல்வியாண்டு 2023 இற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது.

குறித்த பரீட்சை எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினரால் க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளின் பரீட்சை நிலையங்களைச் சுற்றி நுளம்புகளை விரட்ட புகை அடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரு நாள்களாக இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் பரீட்சை நிலையங்களைச் சுற்றி தூய்மை யாக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர் 



யாழில் க.பொ.த உயர்தர பரீட்சை நிலையங்களில் புகை. மாநகர சபை நடவடிக்கை.samugammedia கல்வியாண்டு 2023 இற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை இன்று ஆரம்பமாகியுள்ளது.குறித்த பரீட்சை எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.இவ்வாறானதொரு நிலையில், யாழ் மாநகர சுகாதாரப் பிரிவினரால் க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளின் பரீட்சை நிலையங்களைச் சுற்றி நுளம்புகளை விரட்ட புகை அடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கடந்த இரு நாள்களாக இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அத்துடன் பரீட்சை நிலையங்களைச் சுற்றி தூய்மை யாக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர் 

Advertisement

Advertisement

Advertisement