• Jun 11 2026

புத்தளத்தில் ஸ்மார்ட் கழிவறை!

Ziya / Jun 10th 2026, 3:34 pm
image

புத்தளம் பஸ் நிலையத்தின் கழிவறை சகல வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கழிவறையாக புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மாநகர மேயர் ரின்ஷாட் அஹ்மட் தெரிவித்தார்.


புத்தளம் மக்களுக்கும், புத்தளம் நகரை நாடி வரும் பொதுமக்களுக்கும் நவீனமான சுகாதாரமான மற்றும் வசதியான பொது சேவைகளை வழங்கும் நோக்கில் இவ்வாறு ஸ்மார்ட் பொது கழிவறை புத்தளம் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதகாவும் அவர் கூறினார்.


தேசிய மக்கள் அரசாங்கத்தின்  சுமார் 9 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் பிரதான பஸ் தரிப்பிடத்தில் புதிய ஸ்மார்ட் கழிவறை (Smart Toilet)  வசதிகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பொது மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.


வெளிப்பிரதேச மக்கள் புத்தளம் நகரை நோக்கி வருவது தற்போது குறைவாகவே காணப்படுவதுடன், புத்தளம் நகரின் ஊடாக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு செல்லும் பயணிகள் பஸ்கள் மற்றும் வாகனங்கள் புத்தளம் நகரை தவிர்த்து மாற்றுப் பாதைகளை பயன்படுத்தி வருகின்றனர்


புத்தளம் நகரில் சிறந்த பொது கழிவறை ஒன்று இல்லாதது இதற்கு காரணமாகும் என்பது எங்களால் அவதானிக்கப்பட்டிருக்கிறது.


இதனையடுத்து, புத்தளம் பிரதான பஸ் நிலையத்தில் இவ்வாறு ஸ்மார்ட் கழிவறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.


எனவே, புத்தளம் நகரை நோக்கி வரும் வெளியூர் மக்களுக்கு இது சிறந்த ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், புத்தளம் நகர வியாபாரத்திற்கும் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம் என்றும் புத்தளம் மாநகர சபையின் மேயர் ரின்ஷாட் அஹ்மட் மேலும் தெரிவித்தார்.

புத்தளத்தில் ஸ்மார்ட் கழிவறை புத்தளம் பஸ் நிலையத்தின் கழிவறை சகல வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் கழிவறையாக புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மாநகர மேயர் ரின்ஷாட் அஹ்மட் தெரிவித்தார்.புத்தளம் மக்களுக்கும், புத்தளம் நகரை நாடி வரும் பொதுமக்களுக்கும் நவீனமான சுகாதாரமான மற்றும் வசதியான பொது சேவைகளை வழங்கும் நோக்கில் இவ்வாறு ஸ்மார்ட் பொது கழிவறை புத்தளம் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதகாவும் அவர் கூறினார்.தேசிய மக்கள் அரசாங்கத்தின்  சுமார் 9 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் பிரதான பஸ் தரிப்பிடத்தில் புதிய ஸ்மார்ட் கழிவறை (Smart Toilet)  வசதிகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பொது மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.வெளிப்பிரதேச மக்கள் புத்தளம் நகரை நோக்கி வருவது தற்போது குறைவாகவே காணப்படுவதுடன், புத்தளம் நகரின் ஊடாக கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கு செல்லும் பயணிகள் பஸ்கள் மற்றும் வாகனங்கள் புத்தளம் நகரை தவிர்த்து மாற்றுப் பாதைகளை பயன்படுத்தி வருகின்றனர்புத்தளம் நகரில் சிறந்த பொது கழிவறை ஒன்று இல்லாதது இதற்கு காரணமாகும் என்பது எங்களால் அவதானிக்கப்பட்டிருக்கிறது.இதனையடுத்து, புத்தளம் பிரதான பஸ் நிலையத்தில் இவ்வாறு ஸ்மார்ட் கழிவறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.எனவே, புத்தளம் நகரை நோக்கி வரும் வெளியூர் மக்களுக்கு இது சிறந்த ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், புத்தளம் நகர வியாபாரத்திற்கும் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம் என்றும் புத்தளம் மாநகர சபையின் மேயர் ரின்ஷாட் அஹ்மட் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement