• Apr 17 2026

முள்ளிப்பொத்தானையில் 45இலட்சம் ரூபா செலவில் சிறு கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு!

shanu / Feb 11th 2026, 4:34 pm
image


கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முள்ளிப்பொத்தானையில் சிறு கைத்தொழில் உற்பத்தி நிலையம் இன்று (11) திறந்து வைக்கப்பட்டது. 


தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தார். சிறு கைத்தொழில் அபிவிருத்தி பிரிவு  இதனை ஏற்பாடு செய்திருந்தது. 


இங்கு பெண்களுக்கான பை (Bag) உற்பத்தி, பாடசாலை மாணவர்களுக்கான பை தயாரிப்பு போன்றனவும் இடம் பெற்று வருகிறது. இதன் பிரதான முயற்சியாண்மையாளராக பிஸ்ரியா உள்ளார்.


குறித்த சிறிய உற்பத்தி நிலையம் ஊடாக அப்பகுதி பெண்களுக்கான வேலை வாய்ப்பு உள்ளிட்ட வருமானங்களை ஈட்டவும் வழி செய்கிறது.


இதில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக், இலங்கை வங்கி தம்பலகாமம் பிரதேச கிளை முகாமையாளர் நர்மதா, பிரஜா சக்தி குழு தலைவர் ஜபருள்ளா ,சர்வமதத் தலைவர்கள்,ஐக்கிய பெண்கள் அமைப்பின் தலைவி என பலரும் கலந்து கொண்டனர். 


முள்ளிப்பொத்தானையில் 45இலட்சம் ரூபா செலவில் சிறு கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முள்ளிப்பொத்தானையில் சிறு கைத்தொழில் உற்பத்தி நிலையம் இன்று (11) திறந்து வைக்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தார். சிறு கைத்தொழில் அபிவிருத்தி பிரிவு  இதனை ஏற்பாடு செய்திருந்தது. இங்கு பெண்களுக்கான பை (Bag) உற்பத்தி, பாடசாலை மாணவர்களுக்கான பை தயாரிப்பு போன்றனவும் இடம் பெற்று வருகிறது. இதன் பிரதான முயற்சியாண்மையாளராக பிஸ்ரியா உள்ளார்.குறித்த சிறிய உற்பத்தி நிலையம் ஊடாக அப்பகுதி பெண்களுக்கான வேலை வாய்ப்பு உள்ளிட்ட வருமானங்களை ஈட்டவும் வழி செய்கிறது.இதில் சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக், இலங்கை வங்கி தம்பலகாமம் பிரதேச கிளை முகாமையாளர் நர்மதா, பிரஜா சக்தி குழு தலைவர் ஜபருள்ளா ,சர்வமதத் தலைவர்கள்,ஐக்கிய பெண்கள் அமைப்பின் தலைவி என பலரும் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement